SLOW VIDEO-2014 korean (காட்சிப்பிழை)
💘🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥
SLOW VIDEO-2014 korean (காட்சிப்பிழை)
கிரிக்கெட் பார்க்கும் போது அவுட்டா இல்லையா என்பதை அறிய வீடியோவை ரீப்ளே செய்வார்கள் இல்லையா???
ரொம்ப ஸ்லோவாக வீடியோ ஓடும்… அதாவது 48 பிரேம் மற்றும் 96 பிரேமில் ஒரு காட்சியை ஓடவிட்டால்
ஸ்லோ மோஷனில் ஓடும் அல்லவா??? அது போலத்தான்
சூப்பர்பவறாக கதையின் நாயகனுக்கு காட்சிகள் தெரிகின்றது…
இந்த பிரச்சனை இருக்கும் காரணத்தால் அவனால் வேகமாக ஓட முடியாது…
எவ்வளவு வேகமாக நீங்கள் அவனிடம் ஒரு பந்தை வீசினாலும்… அந்த பந்தினை ரொம்ப ஸ்டைலா பிடிச்சிடுவான்… உங்கள் பார்வை 24 பிரேம்ஸ் என்றால் … அவனுக்கு தெரியும் காட்சிகள் எல்லாமே 96 பிரேம்ஸ்.,…
மெரினா பீச்சில் நடந்து செல்கின்றீர்கள்… ஒருபெண் சட்டையும்…. ஸ்கர்ட்டும் அணிந்து நடந்து செல்கின்றாள்….. கடல் காற்று திடும் என்று அதிகம் வீச… அவளுடைய ஸ்கர்ட் அப்படியே காற்றில் மேலே தூக்கிக்கொள்ள…. அந்த பெண் அலறி அடித்து… காற்றில் பறந்த ஸ்கர்ட்டை தன் கால் இடுக்கில் அடக்கிக்கொள்வாள் இல்லையா.?? உங்கள் பார்வைக்கு ஒரு வினாடியில் ஸ்கர்ட் பறந்து அவள் பதறி கால் இடுக்கில் அடக்கிகொண்டது மட்டும்தான் தெரியும்…
ஆனால் நம்ம ஹீரோவுக்கு ஸ்கர்ட் ஸ்லோமோஷனில் பறக்கும்… அந்த பெண் அணிந்து இருக்கும் ஜட்டியின் கலர் அதில் இருக்கும் பூப்போட்ட டிசைன்… ஜட்டியின் வார் கலர் …. தொடையில் இருக்கும் வடு அனைத்தும் அவனுக்கு தெரியும்.
இதுதான் அவனுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை...
இப்படியான கதையம்சம் கொண்டதுதான் இப்படம்.
இந்த படத்தின் முக்கியமான விஷயம்… இந்த படத்தை ஹாலிவுட் நிறுவனம் 20த் சென்சுரி பாக்ஸ் நிறுவனம் கொரியாவில் தயாரித்த இரண்டாவது படம் இது….
கலெக்ஷனிலும் பிச்சி உதறிய திரைப்படம்…
இப்படியான சூப்பர் பவரை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் யோசிக்கலாம்…. எப்படி எல்லாம் பூந்து விளையாடலாம் ...
ஆனால், இயக்குனர்
இப்படத்தை மென்மையான காதல் கதை பக்கம் சென்று விட்டார்…மிக மென்மையாக கதை சொல்லி நம்மை கட்டி போட்டு விட்டார்.... கவித்துவமான காட்சிகளுக்கு மெனக்கெட்டு இருக்கின்றார்.… சூப்பர் பவரை வைத்துக்கொண்டு காதல் மொழி பேசி இருக்கின்றார்.
புதிய அனுபவத்தை தரும் படமாக இது இருக்கும்,
கண்டிப்பாக அவசியம் பார்க்க வேண்டிய படம்.
நெட்ப்ளிக்ஸில் இப்படத்தை காணலாம்...
https://youtu.be/YMAc1EWBGNg
Comments
Post a Comment