கொரோனா விழிப்புணர்வு
கொரோனா விழிப்புணர்வு
சென்னை, மே 30,
ஈ1 மைலாப்பூர் காவல் உதவி மையம் அம்பேத்கர் பாலம் அருகில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை தமிழ்நாடு சிறப்பு காவல்படை தளவாய் அசோகன் தலைமையிலும், மைலாப்பூர் உதவி ஆய்வாளர்
சீ. குமார் முன்னிலையிலும் 30-05-2021 மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
தளவாய் அசோகன் அவர்கள் பேசியதாவது 'வீட்டிலிருங்கள், தனிமனித இடைவெளியோடு தனித்திருங்கள், வெளியில சுற்றினால் கொரோனா உங்களை சுற்றிக்கொள்ளும். கடைக்கு சென்று பொருட்களை மட்டும் வாங்கவில்லை நோய் தொற்றையும் வாங்கிவருகிறீர்கள். தயவுசெய்து கைகளுக்கு கிருமிநாசினி, சோப்பு போட்டு கழுவுங்கள், முக கவசம் பயன்படுத்துங்கள், தமிழக அரசின் அறிவுரைகளைக் கட்டாயம் பின்பற்றுங்கள். நோய் அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
தடுப்பூசிகளையும் தவறாமல் போட்டுக்கொள்ளுங்கள்.
இசைக்குழுவினரின் தனியிசை வாசித்தும், விழிப்புணர்வு பாடல்களை பாடியும் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Comments
Post a Comment