LOVE AT FIRST FIGHT - 2014 french

💘🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥💘 LOVE AT FIRST FIGHT - 2014 french பொதுவாக பெரும்பான்மையான உலக படங்கள்… சம்பவங்களின் கோர்வையாக மட்டுமே இருக்கிறது. திரைப்படத்தின் முடிவு தீர்வை நோக்கி வலுக்கட்டாயமாக செல்லாமல் இருக்கிறது. நாயகி Madeleine டீன்ஏஜ் பெண்… ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியமும் வேட்கையும் கொண்ட பெண்… நாயகன் Arnaud Labrède அவனுக்கும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது….., இராணுவ தேர்வு நடக்கும் இடங்களில் அவனை பார்க்கலாம்… அப்படியான ஒரு சந்திப்பில் நாயகன் நாயகி இரண்டு பேரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் நிகழ்கிறது… அது காதலாக கனிந்ததா ? இல்லையா? என்பதை சுவாரசியமாக, கவிதையாக, உணர்வுப்பூர்வமாக, மிகவும் ரசிக்கும்படி எடுத்திருக்கிறார் இயக்குனர் ... நாயகன் Arnaud Labrède அண்ணனோடு கார்பென்டர் வேலை செய்தாலும் ராணுவ அக்காடமியில் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாதவன்… நாயகி Madeleine ராணுவ அகாடமியில் சேர்ந்து விட்டால் என்று தெரிந்ததும் தானும் சேரும் முடிவை எடுக்கும் இடம் கவிதை. ஜாலியா வாழ்கையை வாழனும்னு நினைக்கறவனும்… முன் கோபத்தோடு எதையும் அனுகும் பெண்ணும் ஒரு புள்ளியில் இணையும் போது அது எந்த விதமான எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதை ஜிகினாதனம் இல்லாமல் செல்லுலாய்டில் சிறை பிடித்து இருக்கிறார் இயக்குனர். நாயகி Madeleine படம் முழுக்க ஒரு மெல்லிய ஒயிட் பனியன் மற்றும் சுவிம்மிங் சூட்டிலேயே சுற்றுகிறாள்... நண்பனோடு சண்டை இடுகிறாள் ... ஒயிட் பனியனோடு மழையில் தொப்பலாக நனைந்து இயல்பாக பேசுவது மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது ... உலக திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.. சாதாரண கதைதான் ஆனால் அதை இயல்பாய் சொன்ன விதத்தில் மனிதில் நிற்கிறது இந்த படம் ... கண்டிப்பாக பார்க்க வேண்டிய இப்படத்தை அமேசன் பிரைம் வீடியோவில் பார்க்கலாம் ...https://youtu.be/fEeB1kYYL2M

Comments