கவிதைத் திருநாள் விழா மகாகவி ஈரோடு தமிழன்பன் 92 வது பிறந்த நாள் விழா
ஈரோட்டு மகாகவிக்கு தேர் கொண்டு வந்தார்கள்.
அதில் கவிச்சீர் கொண்டு வந்தார்கள்.
மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் 92வது பிறந்த நாள் விழா, தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் சார்பில், சங்கத்தின் நிறுவனத் தலைவர். கவிஞர். தமிழமுதன் மற்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் புரட்சிக்கனல். இளையகம்பன் அவர்களின் தலைமையில் கவிஞர். கு. தென்னவன், முனைவர். அ. பழமொழிபாலன் இருவரின் ஒருங்கிணைப்பில், 92 கவிஞர்கள் பங்கேற்ற மாபெரும் கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம், மயிலாப்பூர் சி.ஐ.டி. நகர், கவிக்கோ அரங்கத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
மகாகவி ஈரோடு தமிழன்பன் பெரியார் பிறந்த மண்ணில் பிறந்தவர். கவிதைத் துறைக்கு, இலக்கியத் துறைக்கு பகுத்தறிவு தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி பெரியாரின் வழிவந்தவர். அண்ணாவை கண்டவர், அண்ணாவை அறிந்தவர், அண்ணாவின் அன்பைப் பெற்றவர். அண்ணாவோடு நட்புறவு கொண்டாடியவர்.
அதோடு மட்டுமல்லாமல் அண்ணாவின் அன்பு தம்பி, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பலநூறு கவியரங்கங்களிலும் மேடைகளிலும் கலந்து கொண்டு, திராவிட இயக்கத்தின் கனவுகளையும், லட்சியங்களையும் தன் கவிதைகளில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த மாபெரும் கவிஞராகவும், போராளியாகவும் பார்க்கப்படுகிறார் ஈரோடு தமிழன்பன்.
நெருக்கடி காலத்தில் கலைஞருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து பயணித்திருக்கிறார். வானம்பாடி கவிஞர் பட்டியலில் முதன்மையானவர். அப்துல் ரகுமான், அப்துல் காதர், நா. காமராசன், அக்னி புத்திரன், தணிகைச் செல்வன், மு மேத்தா இவர்கள் வந்த பிறகுதான் புதுக்கவிதை நேரடியாக சமூகம் சார்ந்து எழுதக்கூடிய கவிதையாக மாற்றம் பெற்றது. வானம்பாடி கவிஞர்கள்தான் இலக்கிய தடத்தில் ஒரு பேர் அதிர்வை ஏற்படுத்தினார்கள்.
ஈரோடு தமிழன்பன் ஒரு கவியரங்கத்தில் கலந்து கொள்கிறார் என்றால், கலைஞரே அந்த விழாவிற்கு வந்து இவருடைய பேச்சைக் கேட்கக் கூடிய அளவுக்கு இவருடைய பேச்சு ஆற்றல் சிறந்த வலிமை பெற்றதாக இருந்தது. அதே மாதிரி யாராவது பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் ஈரோடு தமிழன்பன் அவருர்களுடைய பேச்சை கேட்டு பேசுவதற்கு கற்றுக் கொள்ளுங்கள் என்று கலைஞர் கூறுவார்
கலைஞரின் தொடர்ச்சியாக வந்த திராவிட மாடல் நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அன்பை பெற்றவர். தமிழகத்தின் தலைசிறந்த தமிழரிஞர் ஐந்து பேரை தேர்ந்தெடுத்து, தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் திருகரங்களால் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடு வழங்கப்பட்டது.
முரசொலி அறக்கட்டளை விருது, டொரண்டோ பல்கலைக்கழகத்தின் நாவலர் விருது, தமிழக அரசின் பாவேந்தர் விருது, கலைமாமணி விருது, இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருது, தினத்தந்தி நாளிதழின் சி. பா. ஆதித்தனார் விருது போன்ற விருதுகளை வாங்கிய ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு, வட அமெரிக்க தமிழ் சங்கம்தான் மகாகவி என்று விருது கொடுத்து சிறப்பு செய்தது.
ஈரோடு தமிழன்பனின் 92வது பிறந்த நாள் என்பதால் 92 கவிஞர்களை ஒருங்கிணைத்து, 13 குழுக்களாக பிரித்து, கவிஞர். வானரசன், கவிஞர். எழில். சோம. பொன்னுசாமி, கவிஞர். கவிதண்டபாணி, இயக்குனர். பாலி ஸ்ரீரங்கம், கவிஞர். தே. சு. கவுதமன், கவிஞர். முத்தமிழ், பேராசிரியர். தங்க. பழனிவேல், கவிஞர். நிகரன், கவிஞர். ஆர் ஜெ நாகா, கவிஞர். செங்கதிர்வாணன், கவிஞர். வள்ளி பாபு, கவிஞர். அ. இசை, கவிஞர். ஐயாறு புகழேந்தி என, இந்த 13 கவிஞர்களின் தலைமையில் 13 அமர்வாக, 13 கவியரங்கம், 9 வயதில் தொடங்கி 90 வயதை கடந்த 92 கவிஞர் பெருமக்களும் திருச்சி, தஞ்சாவூர், புதுவை, கடலூர், காரைக்கால், விழுப்புரம், வேலூர் கள்ளக்குறிச்சி நெய்வேலி, மதுரை, ராமநாதபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்போரூர் போன்ற தமிழகத்தின் பல்வேறு திசைகளில் இருந்து, வந்து மகாகவிஞருக்கு கவிதைகள் பாடி விழாவிற்கு சிறப்புகள் சேர்த்தார்கள்.
அது மட்டுமல்லாமல் திரைப்படப் பாடலாசிரியர்கள், கு. கார்த்திக், முத்தமிழ், நிகரன், குகை. மா. புகழேந்தி, தொழிலதிபர் அமுதா பாலகிருஷ்ணன் போன்றவர்களெல்லாம் விழாவிற்கு வந்திருந்து விழாவிற்கு மெருகேற்றினார்கள்.
விழாவில் பங்குபெற்ற கவிஞர்களுக்கு, தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் ”கவிதை திருநாள் விருது” வழங்கி சிறப்பு செய்தது.
மற்றும் கூடல் நிலவன் எழுதிய ”என் கவிதை வானம்” செங்கதிர்வாணன் எழுதிய ”வானை நிரப்பிய வண்ணங்கள்” என்கிற இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டது.
கவிஞர். தமிழமுதன் பாடல் வரிகளில் இசையமைப்பாளர். சுனில் எக்ஸ் இசையில், மகாகவி ஈரோடு தமிழன்பனை போற்றிப் புகழும் "வாழும் மகாகவி" என்னும் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. பாட்டுக் குயில்கள், ”வாழ்க்கை” சகோதரிகள் அ. ப. சுப்ரஜா, அ. ப. சாதனா இருவரும் தங்களது அமுதக் குரலால் பாட, அரங்கமே அதிர்ந்து. கர ஓலிகளால் மனம் குளிர்ந்தது.
கருத்தரங்க அமர்வில், சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறை தலைவர். பேராசிரியர் வ. ஜெயதேவன் தலைமையில், புதுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இரவிக்குமார், பேராசிரியர் சொற்கோ. இரா. கருணாநிதி, புரட்சிக்கனல் இளையகம்பன் இவர்களின் கருத்தரங்கமும் நடைபெற்றது.
பேராசிரியர். வ. ஜெயதேவன் அவர்கள் பேசுகையில் ஈரோடு தமிழன்பன் அவர்களை ஏன் மகாகவி என்று அழைக்கிறோம் என்பதற்காக அவருடைய கவிதைகளில் இருந்து பல சான்றுகளை எடுத்துக்காட்டி பாராட்டினார்.
ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு, ”மகாகவி” என்று விருது வழங்கப்பட்ட நேரத்தில், அவர் நான் எப்போது மகாகவியாக மாறுவேன் என்பதற்கு விளக்கம் கவிதை வாசித்தார்.
ஒரு கொல்லன் மகா கொல்லனாக மாறும்போது
ஒரு உழவன் மகா உழவனாக மாறும்போது
ஒரு தச்சன் மகா தச்சனாக மாறும்போது
நானும் ஒரு மகாகவிஞனாக மாறுவேன்.
என்று ஈரோடு தமிழன்பன் அவர்கள் குறிப்பிட்டதாக பேராசிரியர். வ. ஜெயதேவன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
பேராசிரியர் ரவிக்குமார் அவர்கள் பேசும்போது ஜப்பானிய கவிதைகளை, சென்ட்ரியூகளை, கஜல் கவிதைகளை தமிழுக்கு தெரிவித்த பெரும்பணியை தமிழன்பன் அவர்கள்தான் முதலில் கொண்டு வந்தார். அவரை பல கவிஞர்கள் பின் தொடர்ந்தனர்.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் மரபுக் கவிதையின் புதிய புதிய வடிவங்களான காவடி சிந்து, பல்வேறு வகையான விருத்தங்கள், ஆசிரியப்பாக்கள் போன்ற பல்வேறு புதிய வடிவங்களை கொண்டு வந்தவர்.
அதைப்போலவே அவரின் மாணவரான ஈரோடு தமிழன்பன் அவர்களும் நவீன கவிதைகளில் புதிய புதிய வடிவங்களை பாடுபொருளாக பயன்படுத்தி, புதிய புதிய உத்திகளை கையாண்டு அவர் இந்த உயரத்தை அடைந்திருக்கிறார்.
உலகத்தில் நடைபெறுகிற பல்வேறு சமூக போராட்டங்களையும், சமூக இழிவுகளையும் உடனுக்குடன் தன்னுடைய கவிதையிலே பதிவு செய்து இந்த உலகிற்கு அர்ப்பணிக்கிற ஒரு பெரும்பணியை அவர் செய்கிறார்.
அது மட்டுமல்ல 92 வயதிலும் மொழிபெயர்ப்பு செய்கிறார். இந்த வயதிலும் அவருக்கு இருக்கக்கூடிய நினைவாற்றல் மிகவும் போற்றத்தக்கதாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர் படிக்கிறார். புதிய புதிய இலக்கியங்களை அவர் இறக்குமதி செய்கிறார் என்று ரவிக்குமார் குறிப்பிட்டார்.
இளையகம்பன் அவர்கள் பேசுகையில் ஈரோடு தமிழன்பன் பாவேந்தரின் தொடர்ச்சி. இளம் தலைமுறையினர் எழுதுவதற்கு அவர் ஒரு உந்துசக்தியாக இருக்கிறார். ஈரோடு இரு பெரும் மனிதர்களை தந்திருக்கிறது. அது பெரியாரை மட்டுமல்ல, ஈரோடு தமிழன்பன் என்கிற மகாகவியையும் நமக்கு தந்திருக்கிறது. ஆதலால் அவர் காலம் போற்றும் மகாகவியாக, நமது காலத்தில், இந்த நூற்றாண்டின் மகாகவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஈரோடு தமிழன்பன் அவர்கள் தமிழுக்கு கிடைத்த பெரும் கொடை. 92 முடிந்து 93 ஆவது வயதை தொடர்கிறார். 93 வயதிலும் முக நூல் பக்கங்களில், சமூக வலைதளங்களில், தமிழ் உலகம் போற்றும் தமிழர்களுக்கான கவிதையை படைத்து கொண்டே இருக்கிறார் அவர் எழுதுகோலும் அவர் இயக்கமும் ஒரு நொடிப்பொழுதும் ஓய்வதில்லை. இந்த நூற்றாண்டில் தலைசிறந்த கவிஞராகவும், தமிழ் கூறும் நல்லுலகம் போற்றக்கூடியவராகவும், திராவிட இலக்கிய வரலாற்றின் ஒரு அடையாளமாகவும் ஈரோடு தமிழன்பன் போற்றப்படுகிறார்.
இருபதாம் நூற்றாண்டு மகாகவி பாரதியார். 21 ஆம் நூற்றாண்டின் மகாகவி ஈரோடு தமிழன்பன். அவரை நாம் போற்ற வேண்டும். போற்றி புகழ வேண்டும். அது நம் கடமை. எத்தனையோ கவிஞர்கள், வாழும்போது அவர்களை யாரும் மதிப்பதில்லை. நம்முடன் ஒரு மகாகவி வாழும்போது அவருக்கு சிறப்பு செய்வதை தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் கடமையாக நாங்கள் கருதுகிறோம் என்று புரட்சிக்கனல் இளையகம்பன் அவர்கள் பேசினார்கள்.
பேராசிரியர் சொற்கோ. கருணாநிதி பேசுகையில் அவரின் பெருமையை அடுக்குமொழி கவிதைகளால் பேசி அவருக்கு கவி மாலை சூட்டினார்.
மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் நூற்றாண்டு விழாவை, அவருடைய தலைமையில் 100 கவிஞர்கள் பாடுவதற்கான அந்த ஒப்புதலும் மேடையில் பெறப்பட்டது. உள்ளபடியே கவிஞர்கள் கூறும் வார்த்தைகள் பலிக்கும் என்று சொல்வார்கள். மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் தமிழ் உலகம் போற்றும்படி நூற்றாண்டை கடப்பார். நூறாண்டு காண்பார் என்று தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் வாழ்த்துகிறது
மனமும் உடலும் இணக்கமாகச் செல்ல வேண்டும் என்று கூறுவார்கள்.
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். - என்று திருவள்ளுவப் பெருந்தகை கூறினார்.
இங்கே கவியரங்கம், கருத்தரங்கம் என்று செவிக்கும் உணவு அளித்து, இடையில் தேநீர் வழங்கப்பட்டு, இரவு சிற்றுண்டியாக வயிற்றுக்கு உணவும் பரிமாறப்பட்டு, வள்ளுவப் பெருந்தகை கூறியது போன்று, உடலும் மனமும் ஒரு சேர பசியாறிச் சென்றனர் கவிஞர்கள்.
பொருளாதாரத்தின் அடிப்படையிலும் சரி, 92 கவிஞர்களை ஒன்று சேர்த்த ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பிலும் சரி, சரியான நெறிமுறையையும், சரியான அணுகுமுறையையும் பின்பற்றி, தமிழகம் கண்டிராத ஏன் உலகமே கண்டிராத, ஒரு தனிப்பட்ட கவிஞருக்காக 92 கவிஞர்கள் ஒன்று சேர்ந்து வாழ்த்துக்கவிதைப் பாடிய இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவை முழுமை அடைய செய்த, தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர். கவிஞர். தமிழமுதன் அவர்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும் என வந்திருந்த கவிஞர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
இந்த அரிய முயற்சி, வரலாற்று சிறப்புமிக்க ஒரு கவியரங்க நிகழ்ச்சியாக, வாழ்த்தரங்க நிகழ்ச்சியாக, தன்னுடைய கடினமான உழைப்பால் நடத்திக் காட்டிய தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கவிஞர் தமிழமுதன் அவர்களின் அந்த நேரிய உழைப்பை சங்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் அதை வரவேற்று கைதட்டி அவரை வாழ்த்தினார்கள்
வாழ்க! மகாகவி ஈரோடு தமிழன்பன்
வளரட்டும்! தமிழ்!
பேரன்புடன்.
திரைப்படப் பாடலாசிரியர்
கவிஞர். தமிழமுதன்
நிறுவனத் தலைவர்.
புரட்சிக்கனல். இளையகம்பன்
போதுச் செயலாளர்
தமிழ்நாடு திரைப்படப் தமிழ்நாடு திரைப்படப்
பாடலாசிரியர்கள் சங்கம் பாடலாசிரியர்கள் சங்கம்
பங்கேற்ற கவிஞர்கள்
14.கவிஞர் தமிழ்அமுதன்
15.கவிஞர் கு.தென்னவன்
16.கவிஞர் பழமொழி பாலன்
17.கவிஞர் ஆனந்த கிருஷ்ண தாஸ்
18.கவிஞர் ஆதி கவி
19.கவிஞர் பி.அன்பழகன்
20..கவிஞர் அழகேசன்
21.கவிஞர் பானு ரேகா
22.கவிஞர் பாக்யா
23.கவிஞர் கோ சந்திரன்
24.கவிஞர் செல்வராஜா
25 கவிஞர் தேவகுமாரவேல்
26.கவிஞர் ரமேஷ் மகாராஜன்
27.கவிஞர் கோவிந்தன் குடியாத்தம்
28.கவிஞர் ஹேரிங்டன் ஹரிஹரன்
29.கவிஞர் கலியன்
30.கவிஞர் கன்னித்தமிழதாசன்
31.கவிஞர் கவிப்பார்வை
32.கவிஞர் கூடல் நிலவன்
33.கவிஞர் மேனகா
34.கவிஞர் முகில் வேந்தன்
35.கவிஞர் முல்லை மனோகர்
36.கவிஞர் பாரி கபிலன்
37.கவிஞர் சகாயநாதன்
38.கவிஞர் சித்தார்த்
39.கவிஞர் மகிழினி
40.கவிஞர் சுப்பையா கம்பர்
41.கவிஞர் தன தமிழரசன்
42.கவிஞர் தண்ணீர் குளம் தாசன்
43.கவிஞர் திராணி உ மணி
44.கவிஞர் ரவிவெங்கடேசன்
45.கவிஞர் விஜயலட்சுமி
46.கவிஞர் கலியுகம் கோபி
47.கவிஞர் ஜிவேரா
48.கவிஞர் நட்சத்திரன்
49.கவிஞர் புரட்சிக்கனல்
50.கவிஞர் சுப்பையா கந்தையா
51.கவிஞர் பாக்கியலட்சுமி
52.கவிஞர் பாஸ்கரன்
53.கவிஞர் சுருதிகா
54.கவிஞர் உமா மகேஸ்வரி
55.கவிஞர் மகேஸ்வரி
56.கவிஞர் ரூபஸ் ஆன்டனி
57.கவிஞர் வெ அன்பழகன்
58.கவிஞர் யுவன்சங்கர்
59.கவிஞர் காவ்யா
60.கவிஞர் சண்முகம்
61.கவிஞர் ஜெயவேல்
62.கவிஞர் கலைச்செல்வி
63.கவிஞர் மோகனா விஜி
64.கவிஞர் வெங்கட் கவியமுதன்
65.கவிஞர் வீட்டா சந்தோஷம்
66.கவிஞர் காரை கிருஷ்ணா
67.கவிஞர் அரூர் சிவா
68.கவிஞர் செந்தமிழ்
69.கவிஞர் சக்திவேல் தங்கமணி
70.கவிஞர் சோலை ஆறுமுகம்
71.கவிஞர் சிற்றுளி ராம் கணேஷ்
72.கவிஞர் சோமசுந்தரம்
73.கவிஞர் ஜெ.ஆர்.ஸ்டெல்லா
74.கவிஞர் மாணிக்கவாசகம்
75.கவிஞர் கனக பாரதி
76.கவிஞர் கே.ராஜேந்தர்
77.கவிஞர் மாங்காடு கஜேந்திரன்
78.கவிஞர் நா.வே.அருள்
79.கவிஞர் சுப்ரமணியபாரதி
80.கவிஞர் மு.அ.காளிதாஸ்
81.கவிஞர் சுப.சந்திரசேகரன்
82.கவிஞர் .இராம.சந்திரசேகரன்
83.கவிஞர் அனலேந்தி
84.கவிஞர் பூபாலன்
85.கவிஞர் குடந்தை கும்பலிங்கம்
86.கவிஞர் கு.கார்த்திக்
87.கவிஞர் கவியமுதன்
88.கவிஞர் தனஞ்செயன்
89.கவிஞர் குகை மா.புகழேந்தி
90.கவிஞர் எழில் வாணன்
91.கவிஞர் நம்மூர் கோபிநாத்
92.கவிஞர் கலியபெருமாள்








































































.jpg)




















































































.jpg)


































.jpg)







Comments
Post a Comment