ROAD TO PERDITION (நரகம்) - 2002

💘🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥 ROAD TO PERDITION (நரகம்) - 2002 கேங்க்ஸ்டர் பிண்ணனியில் , தந்தை – மகன் உறவை அழகான காட்சியமைப்புடன் , அற்புதமான இசையுடன் படைத்திருக்கும் கலவையே இப்படம் .... படம் நடக்கும் காலகட்டம் 1931 . ஜான் ரூனி எனும் கிழவர் , ஒரு மிகப்பெரிய கேங்க்ஸ்டர் . அவரின் மகன் , கான்னர் ரூனி . அநாதையான மைக்கேல் என்பவனை , சிறுவயதிலிருந்து ஆதரித்து , தன்னுடனே வளர்த்தி , எதுவுமற்ற அவனுக்கு எல்லாமுமாக இருக்கிறார் ஜான் . கிட்டத்தட்ட மைக்கேலை , தன் மகன் போலவே நடத்தும் ஜான் , எது சொன்னாலும் உடனே செய்துவிடுவார் மைக்கேல் . மைக்கேலுக்கு அழகான குடும்பம், இரண்டு ஆண்பிள்ளைகள் . தான் விழுந்த இந்நரகத்தில் , தன் மகன்களும் விழுந்துவிடக்கூடாது என்ற நினைப்பில் வாழ்ந்துவருகிறார் . துரதிருஷ்டவசமாக , மைக்கேலும் கான்னரும் சேர்ந்து செய்யும் கொலையை கண்கூடாக பார்க்கிறான் மூத்தமகன் . கான்னர் , தன்னைவிட தன் தந்தை , மைக்கேலுக்கு அதிக இடம் அளிப்பதாக நினைத்துக்கொண்டு , மைக்கேலை கொல்ல ஆள் செட் செய்கிறார் . அதே நேரத்தில் , மைக்கேலின் குடும்பத்தை அழிக்கவும் முனைந்து , இளைய மகனையும் , மனைவியையும் கொன்றுவிடுகிறார். மைக்கேல் , கான்னரின் சூழ்ச்சியிலிருந்து தப்பி வீட்டிற்கு வந்தால் , மனைவியும் இளைய மகனும் இறந்துகிடப்பதை பார்த்து , மூத்தமகனை அழைத்துக்கொண்டு வேறொரு இடத்திற்கு செல்கிறார் . கான்னரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மைக்கேலின் மனதில் ஆழ்ந்து பதிகிறது .அதே நேரம் , மூத்தமகன் கண்முன்னே நடந்த இந்நிகழ்ச்சியால் , அவனும் தன்னைப்போன்று நரகத்தில் சிக்கிவிடக்கூடாது என்ற எண்ணமும் அவனை வாட்டியெடுக்க , ஒருவனிடம் உதவிகேட்டு செல்கிறான் . அவனோ , ஜானை எதிர்த்து எதுவும் செய்யமுடியாது என்று கூறிவிட , அங்கிருந்து வெளியேறி தன் மனைவியின் சகோதரி இருக்கும் Perdition என்ற பகுதிக்கு செல்கிறான் . மைக்கேல் உதவிகேட்டு வந்ததை அறிந்த ஜான் , மைக்கேலை கொன்றால்தான் , தன் சொந்த மகனை காப்பாற்ற முடியும் என்பதால் , வேறுவழியின்றி மைக்கேலை கொல்ல , ஒருவனை செட் செய்கிறார் . ஜானை எதிர்த்து தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று அறிந்த மைக்கேல் , ஜான் பணத்தை பதுக்கியிருக்கும் வங்கிகளுக்கு சென்று , ஜானின் பணத்தை , தன் மகனின் உதவியோடு , கொள்ளையடிக்கிறான் . ஒரு கட்டத்தில் , ஜான் செட் செய்திருந்த அடியாளுடன் ஏற்படும் துப்பாக்கி சண்டையில் , மைக்கேலின் கையில் புல்லட் பாய்ந்துவிட , அங்கிருந்து தப்பி , ஒரு கிராமத்தின் பண்ணைவீட்டில் தங்குகிறார்கள் .மைக்கேலுக்கு குணமானதும் , ஜானிடம் பேசுகிறான் .ஜானோ , தான் இறந்தபின் தன் மகன் என்ன ஆனாலும் பரவாயில்லை , ஆனால் உயிருடன் இருக்கும்வரை மகனை எதுவும் செய்யமுடியாது எனக்கூற , மைக்கேல் ஜானை கொன்றுவிட்டு , அவனது மகனையும் பழிவாங்குகிறான் . பின் , தன் மனைவியின் சகோதரி வீட்டுக்கு , மகனுடன் செல்லும் மைக்கேல் , அங்கு மறைந்திருக்கும் , அடியாளின் மூலம் சுடப்படுகிறான் .அந்நேரத்தில் , அங்கு துப்பாக்கியுடன் வரும் மைக்கேலின் மகன் , அந்த அடியாளை சுடுவதற்கு முயல , அந்நேரத்தில் அறைகுறை உயிருடன் இருக்கும் மைக்கேல் , தன் மகனும் தன்வழியே பயணித்து , நரகத்தில் மாட்டிக்கொள்வானோ என்று வருந்த , அந்த அடியாளோ , மகனின் அருகில் செல்ல ஒரு கனத்த சோகத்துடனும் , மெல்லிய புன்னகையுடனும் முடிகிறது படம் . இப்படத்தில் தாமஸ் நியூமேன் எனும் இசையமைப்பாளர் பிச்சியெடுத்திருக்கிறார் . படத்தின் பிண்ணனி இசை ஐரிஷ் நாட்டு இசையை பதிவு செய்துள்ளார், மனதில் ஒரு புது உற்சாகமே வருகிறது. படத்தின் இறுதிக்காட்சியில் , மைக்கேல் , மழைபொழியும் ஒரு பொது இடத்தில் ஜானின் அடியாட்களை சுட்டுக்கொன்றுவிட்டு , ஜானையும் கொல்ல வருவார் . அந்த காட்சியில் , மெல்லிய மெலோடியுடன் இசையை கோர்த்து , அந்த காட்சியை அற்புதமாக மாற்றியிருப்பார். இதே போன்றதொருகாட்சிதான் ‘ஆரண்ய காண்டம்’ படத்திலும் வரும் . சண்டைக்காட்சியின் நடுவே அற்புத மெலோடியை யுவன் வழங்கியிருப்பார் . இப்படத்தின் இசையமைப்பாளர் தாமஸ் தான் , WALL-E , SKYFALL போன்ற படங்களுக்கும் இசை. மைக்கேல் சுல்லிவனாக , டாம் ஹேங்க்ஸ் . பால் வடியும் முகத்துடன் இருக்கும் இவர் கேங்ஸ்டராக மிரட்டியிருக்கிறார். தன் மனைவி , குழந்தையை இழந்து கதறும்போதும் , கிளைமேக்ஸ் முந்தைய காட்சியில் தன்னை வளர்த்து ஆளாக்கிய தந்தை போன்ற ஜானை , சுடும் இடத்திலும் , இவரின் நடிப்பு , அற்புதம் .கிளைமேக்சில் தன் மகன் எங்கே அந்த கொலைகாரனை சுட்டுவிடுவானோ , என்று பதறும் இடத்தில் , அழகான நடிப்பை வாரி வழங்கியுள்ளார் . அடுத்து , ஜான் ரூனியாக வரும் பால் நியூமேன் . டாம் ஹேங்க்ஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் , அவரது நடிப்பின் முன் அனைவரையும் மறக்கடித்துவிடுவார் . அவர் மாத்திரமே தனியே தெரிவார் .ஆனால் , இப்படத்தில் டாம் ஹேங்சை , தூக்கி சாப்பிட்டுவிட்டார் இந்த கிழவர் . டாமை கொல்ல சொல்லும்போது , இவரின் கண்களில் வருத்தமும் , கவலையும் ஒருசேர கோர்த்தவாறு ஒருவித குழப்ப ரியாக்சன் தரும்போது , அவ்வளவு அருமையாக இருக்கும் . டாமை மாத்திரமே கொல்லவேண்டும் , அவன் மகனின்மேல் சிறுதுரும்பும் படக்கூடாது என கொப்பளிக்கும்போது , அவ்வளவு அருமையான மேனரிசங்களை காட்டுவார் . கடைசிக்காட்சியில் , தன்னை டாம் கொல்லவரும்போது , தன் வளர்ப்பு மகனான மைக்கேலே தன்னை கொல்லவருகிறான் என்பதை அறியும் காட்சியும் , அதன்பின் அவரது அழகான நடிப்பும் சொல்லிமாளாது. மனுஷன் ஏற்கனவே மார்ட்டின் ஸ்கார்சோசியின் படத்தில் ஹீரோவாக நடித்து ஆஸ்காரை வென்றவர். 50 ஆண்டு நடிப்பு அனுபவம் ஆயிற்றே !!! கான்னராக , இன்றைய ஜேம்ஸ் பான்டு , டேனியல் க்ரேய்க். ஆர்வக்கோளாறான மனிதராக இப்படித்தில் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார் . பிற நடிகர்கள் தேர்வு , நடிப்பு , ஒளிப்பதிவு , எடிட்டிங் உட்பட அனைத்தும் சிறப்பாக கையாண்டு , ஒரு திருப்திகரமான படத்தினை வழங்கியுள்ளார் சாம் மென்டஸ் . இவர்தான் SKYFALL படத்தின் இயக்குனர் . PERDITION என்பதற்கு நரகம் என்ற அர்த்தம். நரகம் போன்ற கேங்க்ஸ்டர் வாழ்க்கையில் , தன் மகன் பயணிக்கூடாது என்று விரும்பும் தந்தை என்ற குறியீடு தான் , டைட்டில் . மொத்தத்தில் , FEEL GOOD வகையறா படங்கள் , சென்டிமென்ட் படங்கள் , எதார்த்த படங்கள் பார்ப்பவர்கள் , தவறவிடக்கூடாத படம் . இசை ரசிகர்கள் , கேமரா விரும்பிகளும் கண்டிப்பாக பார்க்கலாம் . மெல்ல நகரும் படம் .ஆனால் , டாம்ஹேங்சின் மற்ற படங்களை காட்டிலும் இது கொஞ்சம் வேகம் அதிகம். வன்முறை இல்லாத கேங்க்ஸ்டர் படம் என்பதால் குடும்பத்துடன் கானும்படியான நேர்த்தியான படைப்பு ... நெட்பிளிக்ஸில் இப்படத்தை காணலாம் ...

Comments