YOZEN பாலகிருஷ்ணாவும் பழமொழி பாலனும்
கவிஞர் பாலா!
நேற்று IPRS நிகழ்வில் நீங்கள் எழுதிய கட்டுரையை தமிழமுதன் என்னிடம் தந்திருந்தார்! அதில் உங்களது கட்டுரையை இரவே படித்து முடித்து விட்டேன்!
மிக மிக சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்!
நான் இன்று மதியம் தமிழமுதனைக் கேட்டேன், "இந்த கட்டுரையை தமிழ்நாடன் அவர்கள் திருத்தினாரா", என்று!
"இல்லை ஒரு வரி விடாமல் பாலா அவர்கள் எழுதியது தான்", என்றார் தமிழமுதன்!
எனக்கு பெரு வியப்பு மேலிட்டது!
*ஏதோ பத்திரிகை துறையில் இருபது முப்பது வருடங்கள் இயங்கும் எனது சிறப்பான பல எழுத்துலக நண்பர்கள் போலவே அழகுற எழுதி இருக்கிறீர்கள்!*
ஒரு நேர்த்தியும் எழுத்தழகும், கருத்தழகும் அதில் மிளிர்கிறது!
மேலும் மேலும் உங்கள் தமிழ்ப்பணி பல்வேறு தளங்களிலும் தொடரட்டும்; தமிழமுதன் துணை நிற்பார்!
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!
*-YozenBalki*
🌸🌸🙏🙏🌸🌸
மிக்க மகிழ்ச்சி ஐயா...
உங்களின் ஆழமான நேர்த்தியான பாராட்டு குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்
உங்களின் இருபது முப்பது வருட எழுத்துலக நண்பர்களுடன் என்னை ஒப்பீடு செய்தது என்னை மென்மேலும் அது வளர செய்யும் என்று நம்புகிறேன்
கவிதை எழுத தெரியும் என்றேன் பாடல் எழுதுங்கள் என்று என்னை பாடலாசிரியர் ஆக்கியது தமிழமுதன்...
நீங்கள் எழுதிய பாட்டை நீங்களே பாடுங்கள் என்று பாடச்சொல்லி என்னை பின்னணி பாடகர் ஆக்கியது தமிழமுதன்...
நான் பாடிய பாடல் கேட்டு அவர் அர்த்தராத்திரியில் சிலாகித்து இருந்தார் என்பது எனக்கு பெருமிதம்...
கனவுத் தமிழ் என்றொரு பத்திரிகை ஆரம்பித்து அதில் எழுதுங்கள் என்று சொல்லி என்னை கட்டுரையாளன் ஆக்கியது தமிழ்முதன்...
"இனிய உதயம்" இலக்கிய இதழின் ஆசிரியர் "ஆரூர் தமிழ்நாடன்" அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி அவர் மூலம் பழம்பெரும் கவிஞர். பூவை. செங்குட்டுவன் அவர்களிடம் பேட்டி எடுக்க வைத்து நீங்கள் கூறியது போன்று இருபது முப்பது வருடங்களாக இயங்கும் உங்களது பல நண்பர்களைப் போலவே என்னை எழுத வைத்து உருவாக்கியது தமிழமுதன்...
நான் ஒரு களிமண் என்னை பல்வேறு வடிவங்கள் ஆக்கியது அவர்தான்...
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே....
வானம் எல்லாவற்றுக்குமாக பெய்கிறது அது என்னுடைய தாகத்தையும் தணித்து என்னையும் தழைக்க செய்திருக்கிறது...
அது பெரும்பாலும் போஷாக்கு இல்லாமலே பேய்துவிட்டுப் போகிறது...
அது கோபுர கலசத்தில் பெய்வது பற்றியோ கூவத்தில் பெய்வது பற்றியோ என்னாலும் பெருமிதம் கொண்டதில்லை...
அது பெய்து கொண்டே இருக்கிறது...
அது சிருங்காரம் இல்லாத ஒப்பனை கொள்ளாததுதான் அதன் அழகு...
அது தமிழமுதனாக இருப்பதுதான் நமக்கு பெருமிதம்...
எனக்கு கிடைக்கின்ற எல்லா புகழும் இறைவனுக்கும்... தமிழமுதனுக்கும்...
தமிழமுதன் மூலம் உங்களைப் போன்று நல்ல உள்ளங்களின் நட்பு கிடைத்தது அடியேன் செய்த பாக்கியம்...
🙏🙏🙏
*இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்...*
*அன்பே அன்பே...*
ஓ!! இளமை
ஊஞ்சல் ஆடுது...??
(I know it indicates.. TamilAmudhan.:):) Lol)
இரு வீட்ல சொல்றேன்!!
*-YozenBalki*
🤣🤣👍👍🙏🙏🌸🌸
😁😁😁
தமிழில் பாத்திரங்கள் பல்வேறு வடிவம் கொண்டவை...
ஜப்பானிய கவிதைகள் ஹைக்கூ கவிதைகளாக வடிவம் கொண்டது கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால்...
ஹைக்கூ கவிதைகள் லிமரைக்கூ கவிதைகளாக வடிவம் கொண்டது மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களால்...
மரபுக்கவிதை புதுக்கவிதையாக மாற்றம் கொண்டதற்கு எப்படி வண்ணதாசன், காமராசன், ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா, வைரமுத்து போன்றவர்களெல்லாம் காரணமாய் இருந்தார்களோ அதேபோன்று தமிழ் இன்னும் பல்வேறு வடிவங்களை பெறுவதற்கு த.தி. ப.ச. வின் தமிழமுதன் கூட்டணி கலத்தில் இயங்கும் என்பது காலம் தந்த கொடையாக இருக்கும்...
மேற்கண்ட வாசகம் இதற்கானதான்...
பழமொழி பாலன்
தெரியுது தெரியுது!
சும்மா
கலாய்ச்சல்...
*மிக்க சிறப்பு!*
*-YozenBalki*
🌸🌸🙏🙏
Comments
Post a Comment