IPRS இன் 'கற்றலும் ஈட்டலும் "

 'கற்றலும்  ஈட்டலும் " பிரச்சாரத்தின் மூலம் பாடலாசிரியர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும்  IPRS முழுமையான ஆதரவை வழங்குகிறது.


படைப்பாளியின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தமிழ் இசைத் துறைக்கான முதல் அமர்வுடன் IPRS இன்  இந்தியா முழுமைக்குமான முன்முயற்சியாக இந்தப் பயிலரங்கைத் தமிழ்நாட்டிலிருந்து தொடங்குகிறோம். 

 கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் விவேகா, IPRS இன் தமிழ்நாடு பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள் கவிஞர் தமிழ் அமுதன் (நிறுவனர்/தலைவர் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்)  அவர்களுடன் திரு. ராகேஷ் திகம், நிர்வாகக் குழுவினர், பிராந்தியத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் இயக்குநர்கள்  நிகழ்வில் கலந்து  கொண்டனர்.


சென்னை. 04 ஏப்ரல் 2022 இந்தியன் பெர்பார்மிங் ரைட் சொசைட்டி லிட்  அதன் உறுப்பினர்களில் மீது பெரும் அக்கறை கொண்டுள்ளது. இந்நிறுவனம் துவக்கப்பட்ட 1969-ஆம் ஆண்டு முதல் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் உரிமைகளைப் பாதுகாத்து வருகிறது திறமையான படைப்பாளிகள் தங்கள் உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய முழுமையான தகவல் கொண்டிராமல் இருப்பது கவலை அளிப்பதனால்  இந்நிலைமையைச் சீர் செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சிந்திக்கவைத்தது.

ஒரு பொறுப்புள்ள பதிப்புரிமை சங்கமாக தொற்றுநோய் தாக்கத்தின் போது அதன் உறுப்பினர்கள் சந்தித்த பொருளாதாரச் சீரழிவை IPRS நன்கு அறிகிறது விரைவாக மாற்றங்களை கண்டு வரும் இந்த இசை சார் பிரிவில் உறுப்பினர்கள் கொண்டிருந்த பல சந்தேகங்கள் மற்றும் வினவல்களையும்  அமைப்பு கவனத்தில் கொண்டது. இது சார்ந்து அதன் உறுப்பினர்களுக்கு தகவல் மற்றும் அதிகாரம் வழங்கும் முன்முயற்சிகளை  தொடங்க வேண்டிய அவசியம் எழுந்தது. இந்த முயற்சியின் மூலம் அதன் உறுப்பினர்களை சென்றடைவது  Iprs இன் முதல் நோக்கங்களில் ஒன்றாக மாறியது


இந்நோக்கம் சார்ந்து உறுப்பினர்களுக்காக தொடர் கருத்துப்பட்டறைகளைத் தொடங்க  IPRS முடிவு செய்தது. இந்தியா முழுவதும் நடக்கவுள்ள பயிலரங்கங்கள் IPRS உறுப்பினர்களுக்கு முழுமையான தகவலை வழங்கும் மற்றும் அவர்களின் ஆக்கப்பூர்வமான பயணம் மற்றும் வாழ்க்கைக்குப் பயனளிக்கும் "கற்றலும் ஈட்டலும்' என்ற தலைப்பில்  தமிழகத்தில் பயிலரங்கம் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.

மே 4 2022 அன்று நடந்த முதல் வழிகாட்டும்  பயிலரங்குகள் சென்னையில் நடத்தப்பட்டது. இந்திய இசைத் துறையின் முக்கிய பிரபலங்கள். குறிப்பாக தமிழ் இசைத் துறையின் சிறந்த இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் வெளியீட்டாளர்கள் மற்றும் அனைத்து புகழ்பெற்ற IPRS உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இசைசார் மற்றும் டிஜிட்டல் சகாப்தத்தில்  வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் பயனாளர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாத்தல் IPRS இன் பங்கு போன்ற தொடர்புடைய பகுதிகளை இப் பயிலரங்கம் மையமாகக் கொண்டிருந்தது .


காப்புரிமை சங்கமாக IPRS இன் முன்முயற்சி மற்றும் பங்கு குறித்து கருந்து தெரிவித்த புகழ்பெற்ற பாடலாசிரியர் கவிஞர் மற்றும் உறுப்பினரான வைரமுத்து  கூறுகையில் IPRSஇன்  நடவடிக்கை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது . நான் பல வருடங்களாக இத்துறையில் ஒரு அங்கமாக இருந்து வருகிறேன்  மேலும் சரியான தகவல் இல்லாததால் பல படைப்பாளிகள் தங்கள் உரிமைகளைப் பெற முடியாமல் போவதையும் நான் கண்டிருக்கிறேன். ஒரு படைப்பாளிக்கு உரிய மதிப்பை வழங்குவது அவர்கள் மேலும் உயர வழிவகுக்கிறது. இசைத் துறை முன்னேற உதவும் அதே வேளையில் அவர்களின் படைப்பு முயற்சிகளுக்கு முழுமையான பங்கை அளித்தும் உதவுகிறது" என்றார்.

கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் IPRS உறுப்பினர் மற்றும் IPRSஇன் ARA கமிட்டியின் செயற்குழு உறுப்பினருமான  தமிழ்அமுதன் அவர்கள் எங்கள் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அவர்களின் தகவல்களை எளிமையாக அறிய இந்தப் பயிலரங்கம் உதவியது என்றார்.

இந்தப் பிரச்சாரத்தைப் பாராட்டி கருத்துத் தெரிவித்த புகழ்பெற்ற பாடலாசிரியர் திரு மயூர்புரி கூறுகையில் இசை படைப்பாளர் சமூகத்தின் ஒருமித்த குரலாக IPRS திகழ்கிறது. தற்போது இசைத் துறையானது ஒவ்வொரு நாளும் மேலும் மேலும்  பரவலாக்கப்பட்டு வருகிறது. மேலும் எங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் திரு ஜாவித அக்தர் அவர்களின் எண்ணப்படி, IPRS இல் நாம் அனைவரும் நமது பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய முன்முயற்சிகளை அதிகரிக்க வேண்டியது அவசியம் கற்றலும் ஈட்டலும் பயிலரங்கம் பல நகரங்களில் ஒரு நாள் முழுவதும் நடத்தப்படும் பயிலரங்கத் தொடராகும். இது எங்கள் உறுப்பினர்கள் செழித்து வளர உதவுகிறது. சமூகத்தை ஒன்றிணைக்க இதுபோன்ற விரிவான உள்ளடக்கம் திட்டமிட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும் ஆயிரக்கணக்கான இசை தயாரிப்பாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்"என்றார்.


செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய IPRS தலைமை நிர்வாக அதிகாரி திரு. ராகேஷ் நிகம். இந்திய இசைத் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. மேலும் புவி முழுவதும் மிகவும் பிரபலமான பாடலாசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு இது ஒரு தாயகமாக உள்ளது. தமிழ் இசைத் துறையானது பெருமளவில் பிரபலமடைந்து, மற்றும் பின்புற்றுவதற்குரிய ஓர் அளவுகோலை அமைக்குமளவு பெரிய தாக்கத்தை உருவாக்கி வருகிறது. தொழில்துறை வளர்த்து வரும் நிலையில் பாடலாசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் தங்கள் உரிமைகளை நன்கு அறிந்திருப்பது அவசியமான ஒன்று இந்த முன்முயற்சியின் மூலம் இசை பதிப்புரிமை மற்றும் உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி எங்கள் உறுப்பினர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். IPRS இல் எங்கள் உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கி உறுப்பினர்களையும் இந்திய இசைத் துறையையும் வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும் வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை நோக்கி பாதையை அமைப்பதே எங்களது முதன்மையான கவனம்"என்றார்.


திரு நிகாம் மேலும் கூறுகையில், 20-21 நிதியாண்டில் 169.8 கோடி ரூபாயாக இருந்த IPRS 21-22 நிதியாண்டு 85% வாளர்ச்சியைப் 


















About IPRS:




பதிவுசெய்து 310 கோடிகளாக உயர்ந்து வரலாறு படைத்தது. 20-21,21-22 இந்திய ஆண்டின் மொத்த வருவாயில் ஸ்ட்ரீமிங் OTT இயங்குதளங்கள் முங்கியப் பங்களித்துள்ளன. என்றார்



ராயல்டி வழங்குவதைப் பொறுத்தவரை, முந்தைய ஆண்டு வழங்கிய INR 183.3 கோடியுடன் ஒப்பிடுகையில் INR 200 கோடிகளை முறியடித்து 210 கோடி ராயல்டி வழங்கிய ஆண்டாக இது அமைந்தது IPRS ஆதன் உறுப்பினர்களுக்கு நிவாரண நிதியும் வழங்கியது 21-22 நிதியாண்டின் போது கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட வருமான இழப்பின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் 3900 பாடலாசிரியர்கள் உறுப்பினர்களுக்கு 6.2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.






















The Indian Performing Right Society limited (PRS) is India's only Copyright Society registered under the Copyright Act, 1957, and counts more than 8500 of India's best-known authors, composers, and music publishers as its members IPRS is authorized under the Copyright Act, 1957 to carry on the business of granting and issuing licenses in respect of musical works and literary works associated with musical works assigned to it by its members as well as collect and distribute the royalties to its members including the authors statutory royalties for the exploitation of these works either by way of live performances and/or recorded music through any medium except when exhibited as a part of a cinematograph film shown in a cinema hall


For more information, contact Perfect Relations:


Sherry Rodrigues Shemy Rostneves@eatetriation.com +91 8879204716 Atharwaa kale atharwas kale@perfectrelations.com +31.9833000222

Comments