முத்தமிழ் முகாம் பயிலரங்கம்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தமிழ்நாடு கலைப் பண்பாட்டுத் துறை மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து வழங்கிய மாணவர்களுக்கு முத்தமிழ் முகாம் பயிலரங்கம் 06/05/2022 காலை 10 மணிக்குத் தொடங்கியது.நிகழ்வுக்குத் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார் கவிஞர் ஜெயபாஸ்கர்.சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர்,தமிழ்நாடு கலைப் பண்பாட்டுத் துறை இணைச்செயலாளர் விமலா டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் லதாராஜேந்திரன் பங்கேற்றனர்.வரவேற்புரையை முனைவர் அபிதா சபாபதி நிகழ்த்தினார்.தொகுப்புரையை சுபா அவர்கள் நிகழ்த்தினார்.இயற்றமிழ்ப் பயிற்சியை திரைப்படப் பாடலாசிரியர், பாடகர்,நடிகர், இசையமைப்பாளர் முனைவர் சொற்கோ கருணாநிதி அவர்களும் இசைத்தமிழ்ப் பயிற்சியை திரைப்படப் பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர் செந்தில் தாஸ் அவர்களும்நாடகத் தமிழ்ப் பயிற்சியை இயக்குனர் விஜய் சங்கர் அவர்களும் வழங்கினர்
Comments
Post a Comment