பதறிய எல்&டி நிர்வாகம்

 *திணறிய மாவட்ட ஆட்சியர்*      *பதறிய எல்&டி நிர்வாகம்*.      



எல்&டி கப்பல் கட்டும் துறைமுக  நிர்வாகத்தைக் கண்டித்து பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த 15 மீனவ கிராமங்கள் ஒன்றிணைந்து தொடர் போராட்டம்  23/5/2022 தொடங்கி நடத்தி வருகிறார்கள்.   


  *வேலை கேட்டு போராட்டம்*

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


 எல்&டி நிர்வாகத்தால்  1750 பேருக்கு வேலை தருவதாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஒத்துக்கொண்டு  இதுவரை 250 பேருக்கு மட்டுமே வேலையை  வழங்கி மீதமுள்ள 1500  வேலையை வழங்காமல் இழுத்தடித்ததன்  விளைவே இந்தப் போராட்டம். 


காட்டுப்பள்ளி பகுதியில் எல்&டி நிர்வாகம் கொண்டுவந்த கப்பல் கட்டும் துறைமுகத்தை எதிர்த்து மீனவ மக்கள் இது எங்கள் வாழ்வாதாரத்தையும், 

மீன் வளத்தையும், மீன்பிடி உரிமையையும், மீனவ மக்களின் பொருளாதாரத்தையும், வேரோடு வெட்டி சாய்க்கக் கூடிய திட்டம் இந்தத் திட்டம் இந்தப் பகுதியிலே வருமானால் ஒட்டுமொத்தமாக மீனவ மக்கள் அழிந்து போகக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது, எனவே, இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். 


காட்டுப்பள்ளி பகுதி, மீன் வளம் நிறைந்த பகுதி, முகத்துவாரம் இருக்கக்கூடிய பகுதி, இந்த இடத்தில்  துறைமுகம் வருமானால் நாங்கள் இறந்து போவதே மேல் என்கின்ற அளவில் கடும் போராட்டத்தை அன்றைக்கிருந்த அரசுக்கும், எல்&டி நிர்வாகத்திற்கும் நெருக்கடியைக் கொடுத்ததின் விளைவு, எல்&டி நிர்வாகம், அனல் மின் நிலையம், கடல் நீரை குடிநீராக்கும் திட்ட நிர்வாகம்,MFF  போன்ற மற்றும் பல்வேறு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து அன்றைக்கிருந்த ஆட்சியரோடு உட்கார்ந்து பேசி இந்த மக்களுக்கு 1750 பேருக்கு வேலை வழங்குவது என்று தீர்மானித்து உத்தரவாதம் அளிக்கப்பட்டது. 


அதனடிப்படையில் மீனவ மக்கள் தங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்று உடனடியாக எல்&டி நிர்வாகம் 250 பேருக்கு வேலை வழங்கியது. வழங்கப்பட்ட இந்த வேலை இந்த 10 ஆண்டுகளில் நிரந்தரம் செய்யப்படவில்லை,  ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை, மீதம் இருக்கக்கூடிய 1500 பேருக்கு இன்றும் வேலை வழங்காமல் இருக்கின்றது, மீனவர்களுடைய ஸ்கில் டெவலப்மன்ட் உருவாக்குவதற்காக ஒரு பயிற்சி நிலையம் உருவாக்கப்பட்டு, முதற்கட்டமாக 600 மீனவர்கள் இதில் பயிற்சி பெற்று அதனடிப்படையில் வேலை வழங்குவது என்றும் அந்த ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது, அதனடிப்படையில் ஸ்கில் டெவலப்மென்ட் பயிற்சி நிலையமும் உருவாக்கப்பட்டது, உருவாக்கப்பட்ட பயிற்சி நிலையத்தில் இதுவரை ஒரு மீனவருக்குக் கூட பயிற்சி வழங்கவில்லை, இந்த சூழ்நிலையில் கடந்த 4 நாட்களாக 23/5/2022 தொடங்கி 26/5/2022  மீனவ மக்கள் தொடர் போராட்டத்தை கையிலெடுத்து இருக்கின்றார்கள். இந்த போராட்டத்தின் நோக்கம் ஏற்கனவே வேலை வழங்கப்பட்ட 250 மீனவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கை, அதுபோலவே 1500 பேருக்கு வேலையை உடனடியாக வழங்கிட வேண்டும். இந்தத் தொடர் போராட்டம்.

 முதல் நாள் போராட்டம் எல்என்டி நிர்வாகத்தின் வாயில் முன்பு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீனவ பெண்கள் அனைவரும் இணைந்து அமைதி வழியில் எல்&டி நிர்வாகமே ஒத்துக் கொண்ட வேலையை உடனே வழங்கு. வழங்கியிருந்த 250 மீனவர்களுக்குப் பணி நிரந்தரம் செய் ஊதிய உயர்வு வழங்கி ஸ்கில் டெவலப்மன்ட் பயிற்சிப் பட்டறையை உடனடியாக துவக்கி மீனவர்களுக்கு பயிற்சி வழங்கு என்கின்ற கோஷங்களை வைத்து மிகத் தீவிரமான போராட்டங்களை நடத்தினர் எல்&டி நிர்வாகமே மீனவரோடு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வா என்று அறைகூவல் விட்டது. எல்&டி நிர்வாகம் மீனவ மக்களின் எந்தக் குரலையும் காதில் வாங்காமல் மீனவர்களை அலட்சியப்படுத்தி, அவர்களை காவல்துறையை ஏவி விட்டு அராஜக போக்கினைக் கட்டவிழ்த்து மீனவப் பெண்களை பெண்கள் என்றும் பாராமல் கொளுத்தும் வெயிலில் அடித்து துவைத்து துவம்சம் செய்து தர தரவென்று இழுத்துச்சென்று காவல் வண்டியில் ஏற்றி கைது செய்தது.  இது அன்றைக்கிருந்த அனைத்து நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் செய்திகளாக வந்தது கைது செய்த மீனவர்களை மீஞ்சூர் செல்வ மஹால் திருமண மண்டபத்தில் வைத்து அடைத்தது. இதைக் கேள்விப்பட்ட மீனவ சமுதாய தலைவர்கள் ஜெ. கோசுமணி ஆகிய நான், பாரதி, கபடி மாறன், ஆகிய நாங்கள் உடனடியாக கைது செய்யப்பட்டிருந்த மீனவர்களை மீஞ்சூர் திருமண மண்டபத்திற்குச் சென்று ஆறுதல் கூறி, கவலைப்பட வேண்டாம் உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என்றோம். போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துங்கள், உங்களுடைய வெற்றி மீனவ சமூகத்தின் வெற்றி உங்கள் பின்னால் எல்லா நிலைகளிலும் நாங்கள் இருந்து போராட்டக் களத்திற்கு வருகிறோம் கவலைப்பட வேண்டாம் என்ற ஆறுதல் கூறி, அடுத்தடுத்த கட்ட போராட்டங்களை எப்படி நடத்துவது என்று ஆலோசனை வழங்கி வந்தோம். பின்பு மாலையில் மீனவர் தோழர்களை காவல்துறை விடுவித்தது ஆலோசனை வழங்கப்பட்ட படியே மறுநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் கடல் மார்க்கமாக எல்&டி துறைமுகத்தை கடல்வழி வாயிலாக முற்றுகையிட்டு எல்&டி கப்பல் கட்டும் தளத்தில் வருகின்ற கப்பல்களை மறிக்கின்ற போராட்டம் தொடங்கியது, அடுத்து 25 ஆம் தேதி மீண்டும் தொடர் போராட்டமாக கடல்வழி முற்றுகைப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உங்களோடு பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் வாருங்கள் போராட்டத்தை கைவிட்டு என்று அறைகூவல் விடுத்தார், மீனவ மக்கள் போராட்டத்தை கைவிடாமல்  பழவேற்காடு பாலத்தின் மீது கருப்பு கொடி கட்டி அனைத்து மீனவ தோழர்களை இணைத்து பேரணியாக லைட் ஹவுஸ் அருகிலிருந்து பழவேற்காடு பசார் வரை விண்ணதிரும் கோஷங்களுடன் எல்&டி நிர்வாகத்தை கண்டித்து காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து கோஷங்களை எழுப்பி போராட்டம் பஜார் அருகே வந்து நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் புடைசூழ இந்தப் போராட்டம் மிக வெற்றிகரமாக நடந்தது,  மாவட்ட ஆட்சியர் நமது தோழர்களின் அலைபேசி வாயிலாக போராட்டங்களைக் கைவிடுங்கள் நாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் வாருங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கட்கிழமை காலை என்கின்ற செய்தியை சொன்ன போது இல்லை நீங்கள் நேரில் வாருங்கள் வரும்போது எல்&டி நிர்வாகத்தையும் அழைத்து வாருங்கள் அப்போதுதான் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் வருவோம் இல்லையென்றால் நாங்கள் போராட்டத்தை தொடர்வோம். எல்&டி நிர்வாகத்திற்கு கடல் வழியாக எந்தக் கப்பலும் உள்ளே வரவும் வெளியே செல்லவும் அனுமதிக்க மாட்டோம் என்று பதில் அளித்தோம். மாவட்ட ஆட்சியர் அவர்கள் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தைக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தபோது மீனவ மக்கள் உரத்த குரலில் முடியாது நீங்கள் வேண்டுமானால் வாருங்கள் நீங்கள் மட்டும் வந்தால் போதாது வரும்பொழுது எல்&டி நிர்வாகத்தை அழைத்து வாருங்கள் அப்போதுதான் பேச்சுவார்த்தை நடத்துவோம். இல்லை என்றால் எங்கள் போராட்டத்தை எப்படி நடத்துவது என்று நாங்கள் திட்டமிட்டு அடுத்த கட்ட  நகர்வுகளை நோக்கி செல்வோம்,  என்றனர்.


இன்றைக்கு நல்லாட்சி வழங்கக்கூடிய மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்களுக்குக்  கெட்ட பெயரை, மாவட்ட நிர்வாகமும், எல்&டி நிர்வாகமும் ஏற்படுத்துகின்றது, நாங்கள் இந்த ஆட்சியின் மீது இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறோம், அதை நீங்கள் சீர்குலைத்து வருகிறீர்கள் நாங்கள் இதை மிக விரைவில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து முறையிடுவோம் என்கின்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் அவர்களின் தொலைபேசி உரையாடலில் தெரிவித்தோம். 


மாவட்ட ஆட்சியரும் போராட்டத்தை கை விட்டால் நான் நிர்வாகத்தை அழைத்து வருகிறேன் என்று சொன்னார் போராட்டத்தை கைவிட முடியாது நாங்கள் திட்டமிட்டு போராட்டத்தைத் தொடர்வோம் நீங்கள் எல்&டி நிர்வாகத்தை அழைத்து வந்தால் பேச்சுவார்த்தை என்று பேச்சை முடித்துக் கொண்டோம். 


அடுத்த நாள் 26/ 5/ 2022 அன்று இரண்டு வழியான போராட்டங்களை கையில் எடுத்தோம் ஒன்று பழவேற்காடு பகுதியில் உள்ள  மீனவ மகளிர் களை வைத்து ஒரு தொடர் முழக்க போராட்டம், அதேவேளையில் மீனவ ஆண்கள் தலைமையில் கடல்வழி எல்&டி துறைமுக வாயிலில் போராட்டம் என்று இருமுனை போராட்டமாக போராட்டத்தை தீவிரப்படுத்தி எல்&டியை  கடல்வழி முற்றுகை இட்டு விண்ணதிரும் கோஷங்களை எழுப்பி எல்&டி நிர்வாகமே வேலை கொடு!  வேலை கொடு!! ஒத்துக் கொண்ட வேலையை! உடனே கொடு!!




















 நாங்கள் நினைத்தால்! நாங்கள் நினைத்தால்!!

 ஒரு கப்பலும் உள்ள வராது!

 ஒரு கப்பலும் வெளியே போகாது!! மோதாதே! மோதாதே!! மீனவரோடு மோதாதே!  

 மீனவரோடு மோதினால்! 

தூள் தூள் தூளாவாய்!!  என்று எச்சரிக்கை கோஷங்களை விண்ணதிர முழக்கமிட்டு போராட்டத்தை வீறுகொண்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 26/ 5/ 2022 காலையே பழவேற்காடு பகுதியில் போராடிக் கொண்டிருக்கின்ற போராட்டக் களத்திற்கு நேரடியாக வருகை தந்து அவருடன் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் உடன் வந்து மீனவ பெண்களோடு அங்கேயே அதை வழிநடத்தி வந்த 15 ஊர் கமிட்டியிடம் பேச்சுவார்த்தை துவக்கினார். பேச்சுவார்த்தையின் துவக்கத்திலேயே மீனவர்கள் உங்களோடு பேச முடியாது நீங்கள் எல்&டி நிர்வாகத்தை அழைத்து வாருங்கள் என்று முகத்தில் அறைந்தார் போல மாவட்ட ஆட்சியர் என்றும் பாராமல் நேருக்கு நேராக சவால் விட்டு கூறி இடத்தை காலி செய்யுங்கள் என்று அழுத்தம் திருத்தமாக கூறியதின் பேரில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மீனவர்களிடம் எந்தவித பேச்சும் பேச முடியாமல் தவிர்த்து நின்றது பரிதாபத்திற்கு உரியதாக மாறியது. இருப்பினும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நான் கண்டிப்பாக நிர்வாகத்தோடு பேசி நிர்வாகத்தையும் அழைத்து வந்து உங்களோடு பேச்சுவார்த்தை நடத்துகிறேன், அதுவரை நான் பழவேற்காடு பகுதியை விட்டு செல்லாமல் இங்கேயே இருந்து அவர்களை அழைத்து பிறகு பேச்சுவார்த்தையை  தொடங்குகிறேன் என்று கூறி, பக்கத்தில் இருக்கக்கூடிய ஐபி பங்களாவில் அமர்ந்து கொண்டார். போராட்டம்  மக்களின் கோஷங்களுடன் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது இந்த நிலையில் மாலை 6 மணி வரை நடைபெற்றுக்கொண்டிருந்த போராட்டத்திற்கு மீண்டும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வருகை தந்து எல்&டி நிர்வாகத்தின் முக்கியமான நபர்கள் இல்லாத காரணத்தினால் உங்களோடு பேச வைக்க முடியவில்லை நான் உங்களோடு இருக்கிறேன் நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கான வேலைக்கு உத்தரவாதத்தை நான் வழங்குகிறேன், இந்த போராட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் தெரிந்துவிட்டது அவர்களும் பேச்சுவார்த்தையை முடித்து பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு உடனடியாக வேலை வழங்குவதற்கு ஆவன செய்யுங்கள் என்று எனக்கு உத்தரவிட்டிருக்கிறார், எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம் போராட்டத்தை கைவிட்டு திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாருங்கள் உங்களுக்கான அனைத்து வழிகளிலான அனைத்து உதவிகளையும் என்னால் செய்ய முடியும் நம்புங்கள் என்று மீனவப் பெண்கள் குழுமியிருந்த இடத்தில் உத்தரவாதத்தை வழங்கினார்.  இதை அங்கிருந்த பல்வேறு தோழர்கள் அவரவர் அலைபேசியில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்,  மீனவ கமிட்டி தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்விகளை கேட்டு ஆட்சியரை தினரடித்தனர் ஆட்சியர் கண்டிப்பாக நீங்கள் கவலைப்பட வேண்டாம் திங்கட்கிழமை நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தையில் அனைத்து உடன்படிக்கையும் கண்டிப்பாக நிறைவேறும், நீங்கள் சொல்வது போல் ஸ்கில் தேவலப்மன்ட் பயிற்சி பட்டறையும் மீண்டும் துவக்கி நடத்தலாம் என்கின்ற உத்தரவாதத்தை 250 மீனவர்களுக்கு வேலை நிரந்தரம் ஊதிய உயர்வு வழங்கப்படும் அதேவேளையில் மீதமுள்ள 1500 வேலைகளை படிப்படியாக வழங்குவதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்கிறேன் நீங்கள் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று திரும்பத்திரும்ப நேரடியாக அழைத்ததன் பேரில்,  மீனவ கமிட்டி கலந்து பேசி திங்கட்கிழமை நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் என்பதனால் நீங்கள் இழுத்து அடிப்பதற்கான வேலையை செய்தீர்கள், என்று னார்கள் அப்படி நடக்குமானால் நாங்கள் அடுத்த கட்ட போராட்டம் மிக தீவிரமாக மாறும் அது அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்கின்ற தொனியில் எடுத்துக் கூறினோம். அதனடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து வருகின்ற திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரின் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தைக்கு செல்வதென்று முடிவெடுத்து திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்கு செல்ல இருக்கின்றோம்.


*இவன்.*

*ஜெ.கோசுமணி.*

*தலைவர்.*

*தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம்*

Comments