இன்று நான் சந்தித்தேன் காந்தி கண்ணதாசன்

மெய் சிலிர்த்தேன்



தமிழ் உலகில் தனக்கென்று தனி இடம் பிடித்த கண்ணதாசன் பதிப்பகத்தைப் பார்க்க நேர்ந்தது அந்தசமயத்தில் கவியரசரின் மகனாகிய
 மதிப்பிற்குரிய அண்ணன் காந்தி கண்ணதாசன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது அப்பொழுது தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் அதன் உறுப்பினர்கள் குறித்தும் அதன் கொள்கைகள் குறித்தும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்
 ஒவ்வொரு ஆண்டும் கவியரசர்  பெயரிலே தற்போது பாடல் எழுதிக்கொண்டிருக்கிற பாடலாசிரியர்களுக்கு கவியரசு கண்ணதாசன் விருதை வழங்கி வருகிறோம் என்று சொன்னதும் அண்ணன் காந்தி கண்ணதாசன் அவர்கள் மிகவும் பெருமைப் பட்டார் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் மூன்று பாடலாசிரியர்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் 20000 ரூபாய் பொற்கிழியும் நினைவுப் பரிசும் வழங்கி வருகிறோம் வாழ்நாள் சாதனையாளர் விருது, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விருது, கவியரசு கண்ணதாசன் விருது என்ற மூன்று விருதை வழங்கி வருகிறோம் இந்த விருதுக்கு உரிய தொகையை எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் வாழ்நாளெல்லாம் பாரிவேந்தராகவே வாழ்ந்து கொண்டிருக்கும் பாரிவேந்தர் அவர்கள் தான் வழங்கி வருகிறார் .அவர் நடத்துகிற தமிழ்ப்பேராயம் இந்தத் தொகையை வழங்கி வருகிறது என்று கூறினேன் எப்படி அவரிடம் தொடர்பு வந்தது என்று அவரிடம் கேட்டபோது என்னுடைய மானசீக ஆசிரியரான மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் தமிழ்ப்பேராயம் தொடங்குவதற்குப் பெரிய பங்காற்றியவர் என்பதனால் அவர் மூலம் ஐயாவோடு தொடர்பு கிடைத்தது என்று சொன்னேன். பிறகு  கவியரசர் பற்றிய ஒரு சில மறக்க முடியாத அனுபவங்களை உங்களால் சொல்ல முடியுமா என்று கேட்டபோது அப்பாவை மிகவும் வியந்து பாராட்டுகிற ஒரு மனிதனாக காந்தி கண்ணதாசன் அவர்கள் இருக்கிறார். அவர் சொன்னார் என் அப்பா அப்பாவைப் போலவே நடந்து கொள்ளமாட்டார் என்னுடைய நண்பனை போல என்னை நடத்துவார். ஒரே ஒரு சம்பவம் மட்டும் சொல்லுகிறேன் என்று சொன்னார் நான் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அந்த ஆண்டுத் தேர்வில் ஒரு பாடத்திலே தோல்வியுற்றால் கூட அனைத்துப் பாடத்தையும் மறுபடியும் தேர்வு எழுத வேண்டும் என்று எனக்கு வருத்தம் ,அதை எப்படி அப்பாவிடம் சொல்வது என்பதை நான் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் அப்பா வீட்டுக்கு வருகிறார் ஏன் இப்படி ஒரு மாதிரியாக இருக்கிறாய் என்று கேட்கிறார் நடந்த சம்பவங்களை நான் சொல்கிறேன் உடனே அவர் கவலைப்படாதே என்னுடைய நண்பர்கள் எல்லாம் அரசியலில் மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் நிறைய பேர் இளங்கலை முதுகலை எழுதுகிறபோது
 ஒரே முறை எழுதி வெற்றி பெற்றவர்கள் அல்ல பலமுறை எழுதி அதில் வெற்றிபெற்றவர்கள், எனவே அடுத்த தேர்வில் நீ பங்கெடுத்து வெற்றி பெற்று விடு எனச் சொல்லி விட்டு அவருடைய உதவியாளரை அழைத்து ஆயிரம் ரூபாயை அவனிடம் கொடுங்கள் என்று சொல்கிறார் உதவியாளரும் 1000 ரூபாய் எடுத்து என்னிடம் வழங்குகிறார் உடனே அப்பா இந்தக் காசு வைத்துக்கொண்டு நண்பர்களோடு மகிழ்ச்சியாய் இரு கவலைப்படாதே என்று அனுப்புகிறார். இப்படிப்பட்ட
 ஒரு தந்தையோடு தான் நான் வாழ்ந்தேன் என்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று இந்த சம்பவத்தை சொன்னார் .எப்போதுமே கவியரசர் கவியரசர் ஆக இல்லாமல் ஒரு இயல்பான மனிதராக ஒரு குழந்தைக்குத் தந்தையாக இல்லாமல்  ஒரு நண்பனாக வாழ்ந்திருக்கிறார் என்று அவர் சொன்னதிலிருந்து எனக்கு தெரிய வருகிறது ,அப்படிப்பட்ட கவியரசர் மகனோடு நான் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன் உடனே அவரும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார். பிறகு கவியரசர் உட்காரும் நாற்காலி இதுதான்.நீங்கள் அந்தப்பக்கம் நில்லுங்கள் நான் இந்தப்பக்கம் நிற்கிறேன் நடுவிலே நாற்காலியில் கவியரசர் உட்கார்ந்திருக்கட்டும் என்று சொன்னபோது மெய் சிலிர்த்துவிட்டேன்.அந்தப் படத்தை தான் கீழே பதிவிட்டிருக்கிறேன்.அவருக்கு ஒன்றை நினைவு படுத்தினேன் அண்ணா என்னை நினைவிருக்கிறதா என்று கேட்டேன் ஏன் நினைவிருக்காது எத்தனை முறை உன்னை சந்தித்து பேசி  இருக்கிறேன் என்று சொன்னார் பேசி இருபபீர்கள் நான் கவிதை எழுதத் தொடங்கிய நேரத்தில்  கண்ணதாசன் பதிப்பகம்,
 கவிதை உறவு,உரத்த சிந்தனை,காயத்ரி காசெட் இவர்கள் இணைந்து வைரவரிக் கவிஞர் என்ற விருதுக்காக ஒரு மாபெரும் கவிதை தேர்தலை ஏற்பாடு செய்தீர்கள்.அந்த கவிதை தேர்தலில் என்னுடைய கவிதை தான் முதல் பரிசு பெற்றது அந்த கவிதை 

மதக்கலவர களத்தில் 
 செருப்புகள் 
ஒன்றாக கிடந்தன 
மனிதர்கள் மட்டும்
பிரிந்து பி...ரி...ந்...து 

என்ற, பொது மக்களால் ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் கவிதைக்கு முதல் பரிசை எனக்கு வழங்கி 
'வைரவரிக் கவிஞர் '
என்ற பட்டத்தையும் கண்ணதாசன் பதிப்பகம் சார்பாக எனக்கு வழங்கினீர்கள் தங்களுடன் எழுத்தாளர் விக்ரமன் அவர்களும் கவஞர் இளந்தேவன் இணைந்து அவ்விருதை வழங்கினீர்கள்  அவர் மறக்க முடியாத நிகழ்வு இனி நாம் அடிக்கடி சந்திக்கலாம் இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசியர் சங்கத்தின் செயல்பாடுகள் அவசியம் தேவைப்படுகிறது என்பதை நன்கு உணர்ந்தவன் நான். எனவே, தொடர்ந்து அந்த பணியை எடுத்து செய்யுங்கள் அதற்கு வேண்டிய உதவிகள் தேவைப்பட்டால் என்னை அணுகுங்கள் என்று அன்போடு கூறி வழியனுப்பி வைத்தார் அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்று வந்தேன்






 

Comments

  1. மிகச்சிறப்பு அண்ணா.❤️

    ReplyDelete
    Replies
    1. ஆகா என்ன ஒரு அருமையான சந்திப்பு

      மகிழ்வாக இருக்கிறது...

      வாழ்த்துகள் ஐயா...
      🙏🙏🙏

      Delete
  2. உங்கள் நிகழ்வினை மிகவும் எதார்த்தமாக நீங்கள் பகிர்ந்தது நாங்கள் உங்களுடன் பயணித்த அனுபவம் தந்தது, வாழ்த்துகள் கவிஞரே 👏👏🙏💐

    ReplyDelete

Post a Comment