அடைந்தால் மகாதேவி திரைப்படப் பூஜை

ஏஞ்சல் AND வழங்கும் 'அடைந்தால் மகாதேவி' திரைப்படத் தொடக்க விழா நடந்தேறியது. தமிழன் தொலைக்காட்சி கலைஞர்களின் ஒத்துழைப்போடு வருகிற ஆக.16 அன்று படப்பிடிப்பு தொடங்குவதால் ஆடி 18 அன்று அலுவலகத்தில் எளிமையாகவும் இனிமையாகவும் நடந்தது. விழாவில் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் தலைவருமாகிய தமிழ்அமுதன்,ஒளிப்பதவாளர் ஷெல்லி மற்றும் பல திரையுலக புகழாளர்கள் கலந்து கொண்டனர். சாலிகிராமத்தில் உள்ள ஒரு ஒளிப்பதிவுக் கூடத்தில் இசையமைப்பாளர் ராம்ஜி இசையில் பாடல் பதிவாகியது.அப் படத்தின் இயக்குனர் ஆரோக்கியதாஸ் வந்து வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி கூறினார்.

Comments