தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் பேரமைப்பின்* *ஆலோசனை கூட்டம்
*அன்புமிக்க மீனவ சமுதாய ரத்த உறவுகள் அனைவருக்கும் வணக்கம்*
இன்று 19 8 2021 காலை 11 மணி அளவில் சென்னை பட்டினப்பாக்கம் மீனவர் சமூகநல கூடத்தில் *தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் பேரமைப்பின்* *ஆலோசனை கூட்டம் கு. பாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது* இந்த கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட மீனவர் சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர் இதில் 3.*பொருள்கள் விவாதிக்கப்பட்டன*
1. தேசிய கடல் மீன் வள சட்டம் 2021
2. மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது சம்பந்தமாக
3 சுருக்குமடி இரட்டைமடி வலை சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. இதைத்தாண்டி மேலும் ஒரு பொருள் விவாதிக்கப்பட்டது அந்த பொருள் தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் பேரமைப்புக்கு ஒருங்கிணைப்பு குழு உருவாக்குவது என்று விவாதிக்கப்பட்டது இதனடிப்படையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடத்தப்பட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
*தீர்மானம் 1* மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யும் பொருட்டு தமிழக சட்டமன்றத்தில் எவ்வாறு தீர்மானம் கொண்டுவந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றினாரோ, அதேபோன்று தேசிய கடல் மீன் வள மசோதா 2021 எதிர்த்து அதை திரும்ப பெற தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டுமென *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இந்த பேரமைப்பு கேட்டுக் கொள்கிறது* *
*தீர்மானம் 2*
*தமிழக கடற்கரை ஒழுங்குமுறை சட்டம் 1983இல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் 2017 ஆம் ஆண்டு திருத்தங்களை திரும்பப்பெற வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இந்த பேரமைப்பின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டது*
3 தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் பேரமைப்பு மத்திய பொறுப்பாளர்களாக ஒருங்கிணைப்புக்குழு
கீழ்கண்டவாறு அமைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
* *திருவாளர்கள்* கு.பாரதி ஜெ.கோசுமணி,
கயஸ்பெர்ணாண்டோ,
N.J.போஸ்,
அசோகா சுப்பிரமணி,
பி ஜி ஆனந்தன்,
ஏகா புகழேந்தி, நாஞ்சில் ரவி, மங்கையர் செல்வன்,
கபடி மாறன்,
சா ரூபேஷ்குமார், வே சங்கர், ஜெகதீசன், கனகசபை,
துரை மகேந்திரன், பிரவீன் குமார்,
கடல் கார்த்திகேயன்,
ஆர் சிவாஜி, தர்மராஜ், லோகநாதன், வழக்கறிஞர் லிங்கன், வழக்கறிஞர் ஜான்சன்,
ராஜாளிபக்தர்,
பா. மதியழகன்
*தீர்மானம் 4* மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என *மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் கொடுக்க வேண்டுமென இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.*
*தீர்மானம் 5* மாவட்டங்கள் தோறும் தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் பேரமைப்பின் அமைப்பை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
* *தீர்மானம் 6* தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் பேரமைப்பின் சார்பாக *புதுச்சேரியில் போராட்டம் செப்டம்பர் மாதத்தில் நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது*
*7 தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் பேரமைப்புடன் சேர்ந்து செயல்படும் அமைப்புகள். மாதம் 500 ரூபாய் குறைந்தபட்சமாகவும் அதிகபட்சமாக ஒவ்வொரு சங்கமும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் வழங்கலாம் என்றும் இதற்கு ரசீது புத்தகம் அடிக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது*
*தீர்மானம் 8*
*தமிழ்நாடு புதுச்சேரி பேரமைப்பின் 10 பேர் கொண்ட தலைமை ஒருங்கிணைப்பு உருவாக்க வேண்டும் என்று பேசியதின் அடிப்படையில் 10 பேர் கொண்ட ஒரு தலைமை குழு உருவாக்கப்பட்டது*
*1.கு.பாரதி*
*2. ஜே. கோசுமணி*
*3 நாஞ்சில் ரவி*
*4 பி ஜி ஆனந்தன்* *5.ஏகா.புகழேந்தி* *6.ச.ரூபேஷ்குமார்*
*7.வே.சங்கர்*
*8.k. ஜெகதீசன்.* *9.பிரவின்குமார்*
*10.AGR.கோவிந்தராஜ்*
*ஆகியோர் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டது*
Comments
Post a Comment