கவியரசு கண்ணதாசன் விருது

தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் மற்றும் அஜந்தா பைன் ஆர்ட்ஸ் இணைந்து ஒருங்கிணைத்த கவியரசு கண்ணதாசன் விருது & மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் விருது வழங்கும் விழாவிற்கு சிறுபான்மை பிரிவு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு மஸ்தான் அவர்கள் விருதுகள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.வரவேற்பரையை தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கவிஞர் தமிழ்அமுதன் நிகழ்த்தினார்.முன்னிலை வகித்த திரு.k.r.k அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.நன்றியுரையை அஜந்தா பாபு அவர்கள் நிகழ்த்தினார்.விழாவில் கவியரசு கண்ணதாசன் விருதை பாடலாசிரியர்கள் கவிஞர் புரட்சிக்கனல், கவிஞர் பால் முகில், கவிஞர் ஆமூர் ராஜேந்திரன், கவிஞர் ரேமன்ட், கவிஞர் விஜய், கவிஞர் மேதை சரவணன் இசையமைப்பாளர்கள் திரு.பூபதி,திரு.ஜெய்கிஷன்,திரு நரேன்பாலகுமாரன்,சந்தோஷ் தயாநிதி பாடகர்கள் வீரமணிகர்ணா,முகேஷ்,சுபீஷ்,சிறீதர்,சஞ்சனா,சிறீநிதி,சிறீநிஷா,ஜனிதா,அக்ஷிதா, லாயர்ட் விக்டர் அபி பெற்றனர், மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் விருதை பாடகர்கள் அனந்து,செந்தில்தாஸ்,பாக்கியராஜ்,பிரியாஹேமேஷ்,சுர்முகி,அமிர்தா,சுமேகா மற்றும் எம்.எஸ்.வி உதவியாளர் சந்துரு பெற்றனர்
47 ஆண்டுகள் அஜந்தா பைன் ஆர்ட்ஸ வழங்கும் M S விஸ்வநாதன் விருது மற்றும் கவிஞர் கண்ணதாசன் விருதை கொடுத்து கவிஞர்கள் பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களை ஊக்கப்படுத்துகிறது. இந்த வருடம் அஜந்தா பைன் ஆர்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர் சங்கம் இணைந்து வழங்குகிறது. எனக்கு இந்த வருடம் தமிழ்நாடு திரைப்படப்பாடலாசிரிய சங்கத்தலைவர் அண்ணன் தமிழமுதன் பரிந்துரையின் நிமித்தம் கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது. இது சங்கத்திற்கும் சங்கத்தலைவருக்குமே இந்தப் பெருமைச் சாரும். கவிஞர் புரட்சிக்கனல். ------------------- பெருமையாக இருக்கிறது... நண்பர் புரட்சி கானல் அவர்கள் *கவியரசு கண்ணதாசன் விருது* பெறுவது குறித்து மிக்க மகிழ்ச்சியும் நெஞ்சம் நெகிழும் வாழ்த்துக்களும்... *"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு* *எல்லோர்க்கும் பெய்யும் மழை”* *கவிஞர் தமிழமுதன்* அவர்களை, திரைப்பட பாடலாசிரியர் சங்கத்தின் நிறுவனர்/தலைவராக பெற்றதில் *தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர் சங்கம்* பெருமகிழ்ச்சியும், பேரானந்தமும் அடைகிறது. *மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்* நாமெல்லாம் சிறந்த பாடலாசிரியராக பிரதிபலித்து கவிஞர் தமிழமுதன் அவர்களுக்கு பெருமை சேர்ப்போம் பேரன்புடன் முனைவர். அ. பழமொழிபாலன்; M.Sc; M.A; B.Ed; P.hD., மயிலாப்பூர். --------------- விருது பெறும் நம் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நமக்கு வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் எப்போதும் நம்முடனே பயணிக்கும் நம் தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர் சங்க நிறுவனர் மற்றும் தலைவர் திரு தமிழமுதன் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன் !! இனிவரும் காலங்களில் நம் சங்க உறுப்பினர்கள் இது போன்ற மேலும் பல விருதுகளை பெற்று நம் சங்கத்திற்கும் நம் தலைவருக்கும் பெருமை சேர்ப்போம் !! என்றும் அன்புடன் கூடல் நிலவன் !! 👏👏👏🤝🤝🤝👍👍

Comments

Post a Comment