கவிதை வனம் 376 பரிசு அறிவிப்பு


ஓராண்டு கடந்து

நாள்தோறும்

நாங்கள் நடத்தும்


கவிதை வனம் புலனக்குழு வில் 



ஒருநாள் நடுவராக 

இருந்து பரிசிற்குரிய

3_ கவிதைகளையும்

ஆறுதல் பரிசிற்குரிய

2- கவிதைகளையும்

தேர்வு செய்து,

காணொளியில் பேசி

பதிவு செய்து அனுப்ப

வேண்டுகிறேன்.


இதற்கு நான்கு அல்லது

கூடுதல் நாள் தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளலாம்.

தங்கள் ஒப்புதலை

9952573481

என் எண்ணிற்கு அழைத்து சொல்லலாம்.

செய்தி அனுப்பலாம்.


தங்களுக்கு தொல்லை

தரக்கூடாது என்று

எண்ணத்தில் புலன் வழியாகச் செய்தி அனுப்பி உள்ளேன்.


விரிவாக பின் பேசுவோம்.


நன்றி.


1,காணொளி.(வாட்சப்)

2.குரல் பதிவு.

3.எழுத்துருவு.

🌹376🌹376🌹376🌹376🌹

   

*கவிதை வனம் புலனக் குழுவின் தினசரி கவிதைப் போட்டி*


*வனம்: *14* 

விருட்சம்:  *11* 


நாள் : **376

தேதி : *11.05.2023*


கிழமை: *வியாழன்* 


 *_தலைப்பு_ :* 


 *பெண்ணியம் பேசுவோம்.* 


🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

 நடுவர்.

 

*கவிஞர்* 

*திரு.தமிழ்அமுதன்*

(நிறுவனர்-தலைவர்

தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்)


🏆🏆🏆🏆🏆🏆🏆🏆


பங்குப் பெற்றக் கவிஞர்கள்:

         *21*


🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

01.

*பெண்ணியம் பேசுவோம்*


சர்வப் பெண்களுக்கும்

சமஉரிமை வேண்டுவது

ஆண்-பெண் இருவரும்

ஒற்றுமையை ஏற்பது


அனைத்து வாழ்க்கை 

முறைகள் பணிகட்கும்

உரிமையான வாழ்வே

பெண்ணியம் ஆகிறது


படிப்பு பணியாலும்

பெண் உயரும்போது

நாட்டுக்கு வீட்டுக்கும்

நன்மையே விளையும்


பெண்ணியப் பெண்

மற்றப் பெண்ணைப்

பாது காக்காதபோது

முரணாகி விடுகிறாள்


ஆணுக்கு உடலிலே

பெண்ணுக்கு மனதிலே

பலங்கள் இருப்பதை

ஏற்கவே  வேண்டும்


படித்து பணியாற்றும்

பெண்களின் இடையே

மாமியார் நாத்தனார்

மாறாத பிரச்சனைகள்

..........

கல்யாணம் ஆகியும்

குழந்தை ஆளாகியும்

கணவணைப் போல

கட்டின்றி மீறுகிறாள்


அறிஞரும் கலைஞரும்

அறிவுறுத்து வதெலாம்

தன்மான உரிமையில்

தரமாய் வாழத்தான்!


*பிராயச்சித்தன்*


🏆🏆🏆

02.

*பெண்ணியம் பேசுவோம்* 

                            

பெண்ணே பெண்ணுக்கு

எதிரான உலகில் பெண்ணியம் பேசுவது கேலி கூத்தே


கண்ணியம் இல்லாத மாந்தரில்

பெண்ணியம் பேசுவது நாடகம்


திண்ணிய வாழ்வில் தினம்

பெண்ணியம் சீரழிக்கும் பன்னிகளே திரிகிறது 


மனம் புண் மயம் நிறைந்த

பிண இடர் கன்னியழிக்கும்

சத்துரு சாப கேடுகள் 


குரூர பிறவி மாந்தர் மந்தியே

பள்ளி, பணியிடம் பெண்மை


இரையாடும் ஈனமிகு இவர்கள் 

குறைபாடு மன கோளாறுகள் 


பேசி தீர்வதல்ல பெண்ணியம்

நற்செயலில் பழகுவோம் 


பெண்ணியம் பேசுவதவமானம்

பெண் சுயம் அடமானம்


கண்ணும் இமையும் போல்

பெண்ணும் மனமும் வலிமை


பெண் ஈயம் பூசும் பாத்திரம்

அல்ல மின்னும் மிலினம்


*திருவரங்கம். ச. முருகேசன்*


 🏆🏆🏆

03.

*பெண்ணியம் பேசுவோம்*


அடுப்பறையில் அடிமையாக்கி

படிப்பறிவில் சிறைசெய்த

பழமையைக் கொளுத்துவோம்

பறைக்கொட்டித்தானே...


தடக்கிய  தடையெல்லாம்

முடக்கிய இடமெல்லாம்

தடுப்பணை விலக்குவோம்

தரணியைக் காட்டிட....


அறியாமை ஒழியட்டும்

திறமைகள்  திறக்கட்டும்

புதுமைகள் செய்வோம்

புவிதனில் நாளுமே...


விழி திறக்கட்டும்

விழிப்புணர்வு கிடைக்கட்டும்

விழா எடுப்போம் 

விடியல்கள் பெண்மைக்கே....


காட்டாற்று வெள்ளம்

சீற்றமிகு புயல்

புரட்டிப்போடும் சுனாமி

பொங்கியெழும் எரிமலை

பிளக்கும் பூகம்பம்

கொட்டிக்தீர்க்கும் பெருமழை

கட்டிப்போடும் இயற்கை

அவளே பெண்!


திருமதி *மோ.கோமளாநேதாஜி*


🏆🏆🏆

04.

*/பெண்ணியம் பேசுவோம்/*


முன்னமொரு காலத்திலே

முகிழ்த்தஇனம் யாவிலுமே

பெண்ணடிமை இருந்திட்டதே 

இன்று

பூரணமாய் மாறிவிட்டதே !


இன்றிந்த பூமியதன்

இயக்கமது நில்லாமல்

இருப்பது பெண்ணியத்தாலே

நாம்

செய்திட்ட புண்ணியத்தாலே !


எத்துறை ஆனபோதும்

அத்துனை துறைகளிலும்

முத்திரை பதிப்பதெலாம்

நாம்

பெண்ணியம் போற்றுவதாலே !


அந்நியன் வந்துநமை

ஆட்சிசெய்த போதிலுமே

பெண்ணியம் போற்றினோமே

அவர்

கண்ணியம் காத்தோமே நாம் !


கண்ணவள் என்றுபெண்ணை

காத்திடும் ஆண்களுக்கு

பின்னவள் இருந்திடுவாள்

அவனை

விண்முட்ட உயர்த்திடுவாள் !


பெண்ணியம் தினம்பேச

பேருவகை கொள்ளுவோம்

மண்ணில் பெண்இல்லையேல்

உயிர்கள்

தழைக்கா தெனச்சொல்லுவோம்.

  *மு. நாகராஜன்.*

             

🏆🏆🏆

 05.

*பெண்ணியம் பேசுவோம்*


பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களென நினையும்  மாயைதனை கலைந்தெறிவோம்


பெண்கள் நாட்டின் கண்கள் தாயாக.தமக்கையாக.மனைவியாக.மகளாக அவதாரங்களாக பரிமணப்பிதால் வணக்கத்துக்கு உரியவர்களாக 


மேடைகளில் பெண்கள் எழுச்சிப்பெற வேண்டும்  ஆண்களுக்கு சரிநிகராக சாதிக்க வேண்டுமென பேசி


வீட்டில் அடக்குமுறையை கையாளும் ஆண்வர்க்கத்தின் கயமை ஒழிவது எப்பொழுது


கணவனுக்கு கொஞ்சம் நல்லது சொல்லி விட்டால் துடுக்குக்காரி.ஆணவமென மூலையில் முடங்க வைத்தும் விடுகிறார்கள் 


பெண்கள் சாதிக்கப் பிறந்த சாதனையாளர்களென பெண்ணியத்தை கண்ணியமாக பேசுவோம்


            *எம்.ஜெயபாலன்.* காப்பார்.மலேசியா.

            

🏆🏆🏆

06.

*பெண்ணியம் பேசுவோம்.*


அறியாப் பருவத்தில்

அஞ்சாமைக் காலத்தில்


பாதுகாப்பு கருதி

பயம்  புகுத்தப்பட..


ஆளோடு சேர்ந்து

அதுவும் வளர..


தொட்ட தொண்ணூறுக்கும்

அச்சமே

அச்சாரமாக..


பழக்கப் பதிவு

விளக்கம் கிடைத்தும்


விலகாமல்

வில்லஙகம் செய்ய..


தெளிவே தீர்வென்று

அறிவே சொல்லுதே..


அதுவே

இவ்வுலகை வெல்லுதே..



*கண்ணம்மாள் ஸ்ரீதர்*


🏆🏆🏆

  07.

*பெண்ணியம் பேசுவோம்*


பெண்ணியம் என்பதை பேருவகையாய் பேசுவோம்.

கண்ணியம் ஒன்றை கடைபிடித்திடுவோம்.


ஆண், பெண் 

பாலின உயர்வு, சண்டையல்ல பெண்ணியம்.

ஆண வரையில் எதிரெதிர்பாலினம் மதிப்பாய் நடப்பது மானுடம்.


நடை, உடை, பாவனை பிரதியெடுப்பது அதுவல்ல பெண்ணியம்.


யுகயுகமாய் தொடரும் பண்பாட்டு சங்கிலி

பெண்ணியம்.


தவிர்க்க முடியாத சூழலும், தவித்து வாழும் சூழலும், சகித்து வாழ்வதல்லவே பெண்ணியம்.


சுப்புலட்சுமியாய் பாடல்கலைகளும்,

முத்துலட்சுமியாய் மருத்துவமும் தடைகள் தாண்டி வெற்றிபெறுவது பெண்ணியம்.


கத்தும் கடல் தாண்டி, காணா விண்வெளி தாண்டி சாதனைகொள்வதே பெண்ணியம்.


அழகுபடுத்துவதும், ஆர்ப்பரிப்பு ஆட்டம் பாட்டமும், இரவுவிடுதி கேளிக்கையும் பெண்ணியமல்ல. 


இழுக்கு இல்லாத நேர்க்கொண்ட பார்வையும், கண்ணிய கடைப்பிடிப்பும் மட்டுமே பெண்ணியம்.


கல்வியென்ற தோணி கொண்டு வாழ்க்கையெனும் கடலை தாண்டுதலே

பெண்ணியம்.


சொந்தக்காலில் நின்றுகொண்டு பந்தக்காலை தேடுவதே பெண்ணியம்.


பாரதியும், பெரியாரும் பேசிய பெண்ணியம் போதும்.


பாரதத்தில் உனது மிகையான கடமை, அமைதியான கண்ணியம்,

தவறு நேராத கட்டுப்பாடு மேற் (சீர்) கொள்வதே பெண்ணியம்.


 *தன. மகேஸ்வரி.*

     

🏆🏆🏆

08.

*பெண்ணியம் பேசுவோம்*


வயல்வெளி பனிக்கரும்பென  வகைவகை வைகை நதி நீர் கற்பனை...


இயற்கை பேரின்பப் பெண்ணே... 


ஒன்று பட்ட சமூகத்தில்

பெண்ணை வென்று விட்டதாய்  பெருமை பேசும் ஆணினமே... 



பூவின் வாசம்

புவிக்கு தருபவர் யார்


முள்ளுக்கும் முத்தம்

நித்தம் தந்து தியாகி ஆவது யார்... 


ஆகாயம் திறந்தாலும்

அழகு செய்து கொள்வது யார்


பால் தண்ணீர் தருவது யார்


பால் சோறு

 ஊட்டியது யார்


பாட்டி கதை 

பரமன்உடல்பாதி 

முருகன்காதல் 

 நபிகள் யேசு

பெற்றது யார்... 


நதிகள் பெயர்

சொல்லி ப் பார்


மனிதனை இணைக்கும்

அன்பு பாலம் யார்.. 


விடுதலையே நீயார்

ஜனநாயக மே

உன் பெயர் என்ன... 


அமிலங்கள் அமுதமாகும்

அணுக்கரு  உயிருடலாகும்


உன் பேருக்கு

சத்தமில்லா தியாகிகளே


சாத்தானும் சலாம் செய்யும் உன்னை


வெற்றி மகிழ்ச்சி களின் அவதாரப்

பெண்ணை போற்றுங்கள்


மனம் சுத்தம் ஆகும்

வாழ்வு மகாத்மாவாக


பெண்ணியம் பேசி

பேரன் பில்  வாழ


புகழலாம்

பெண்ணை

போற்றலாம் என்றும்

பெண்ணியம்


*அ. சிவகுமார்*


🏆🏆🏆

09.

*பெண்ணியம் பேசுவோம்!*


பெண்ணியம் பேசுவோம்

பெருமைகள் கூறுவோம்

கண்ணியம் குறையாமலே--பெண்களின்

கருத்துக்கள் சிதையாமலே!


அடுப்படி மட்டும்தான்

அவளின் உலகமென

உரைப்போர் திருந்தட்டுமே--அவள்

உணர்வை மதிக்கட்டுமே!


ஆணுக்கு பெண்ணும்

பெண்ணுக்கு ஆணும்

அடிமை இனியில்லையே---அது

கொடுக்கும் பெருந்தொல்லையே!


உழைத்தால் தான் உணவென்று

உறுதியான பின்னாலே

சமநீதி கைகோர்க்குமே--புதிய

சமுதாயம் உருவாக்குமே!


அவனின்றி ஓரணுவும்

அசையாது என்பதனை

அவளின்றி எனமாற்றுவோம்--என்றும்

அணையாத விளக்கேற்றுவோம்!


கண்ணீரில் கரைந்திடவே

கடவுள் படைத்தான்எனும்

வாதத்தை புறந்தள்ளுவோம்--புதுப்

பாதைக்கு வழிசொல்லுவோம்!


*செங்கதிர்வாணன்*


🏆🏆🏆

 ‌10.

*பெண்ணியம் பேசுவோம்*


வலிமையுள்ளவன் ஆண்மகனென்றும்

வலிந்து போர்செய்யும் திறன்மிக் கோனென்றும்

எத்தனை காலமாய் சொல்லிவைத்தார் கதைகளை

எல்லாமே பொய்யாச்சு இன்றைய உலகிலே


இன்றைய போர்முறைகளும் மாறிப் போச்சு

எல்லா தந்திரங்களும் அறிவு மயமாச்சு

அறிவே இன்றைய பெண்ணின் ஆயுதமாச்சு

அதனால் செயல்திறன் கூடுதலாச்சு


பெண்களின் ஒற்றுமை பேரெழுச்சி கண்டது

ஒவ்வொரு துறையும் ஓங்கி வளருது

ஆணவன் வலிமையோ உடலில் மட்டுமே

பெண்ணவள் வலிமையோ உலகையே ஆளுது


படித்த பெண்ணால் குடும்பநிலை உயருது

பெற்ற பிள்ளைகள் புதுவாழ்வு காணுது

அன்பும் அறிவும் சொல்லித்தரும் பெண்ணால்

அகிலம் எங்கும் ஓர்புத்துணர்வு கொள்ளுது


மடமைகள் இல்லாத மதிநுட்பம் கொண்டே

கடமைகள் காரியங்கள் விரைவில் நடக்குது

பெண்ணின் வலிமையும் ஆணின் வலிமையும் 

ஒன்றாய்ச் சேர்ந்தால் உலகமே வலிவுறும்


அன்பு காட்டுவாள் அமுது ஊட்டுவாள்

அநீதி காணின் அதனைத் திருத்துவாள்

பண்பின் சின்னமாய் வாழ்ந்திடும் பெண்ணவள்

பாம்பின் விடத்தையும் தேவையெனில் கக்குவாள்


*குமாரசாமி*



🏆🏆

  11

*பெண்ணியம் பேசுவோம்*


பெண்தானேயென்று சொல்லாதே 

பேரண்டத்தின் கருவறையவள்/

அமுதளிக்கும் அன்னையவள்

அன்புவிளையும் நிலமவள்/


இக்காலத்தில் மட்டுமல்ல

அக்காலத்திலும் அவளே/

எக்காலமும் பெண்ணே

முக்காலமும் முக்கியமவளே/


தாங்குவதற்குசிறந்தது பூமியுண்டு

தாய்மைக்குஅதைவிட சிறப்புண்டு/

சுற்றிக்கொண்டேயிருக்க பூமியுண்டு

சுகமாகசுமக்க பெண்மையுண்டு/


மாதவம் செய்த 

மங்கையரே மாசக்தி/

மதித்து நடந்தால்

கிடைத்திடும் மாமுக்தி/


பெண்ணின் பெருமையறிந்து

பெண்ணியம் பேசுவோம்/

பெண்ணின் தரம்புரிந்து

பெண்மையை போற்றுவோம்/


*ஆர்.வள்ளி*


🏆🏆🏆

 12.

*பெண்ணியம் பேசுவோம்.*


ஆயத்த ஆடையாய்

பொருந்திட,


ஆயுசுக்கும் அடிமை

அவதாரம் எடுத்திட,


உடல் கூடாத, எடை

பெருக்கா இடையுடன்,


தெரிந்தும் தெரியாத

தன்மையுடன்,


வீட்டை  மட்டுமே

வலம் வரும் நடையாக,


இசைவாக பேசும்

இல்லாளாக,


முதலெழுத்தில்

முக்கிய மாற்றமாக,,


கடவுளின் உருவமே

கணவன் வடிவமாக, 


நாக்கு வளர்க்க

நல்ல சமயலராக,


படுக்கை தட்டிப்போட

பதுமை உருவாக,


வாரிசு பெற்றெடுக்க

வயிறு வளர,


கணவன் வேலைக்கு

கிளம்ப,


மனைவி மலர்ந்த

முகமாய் அவனை அனுப்பினால்,


 பெண்ணியம் பற்றி

பொதுவெளியில்

பேசுவான்........

பெண்கள் தெய்வமென.......


சலித்து விட்டது

புளித்துப் போன

பெண்ணியப் பேச்சுகள்....


வேறு  ஏதேனும்

பேசுங்களேன்....


*பா.தேவிமயில் குமார்*


🏆🏆🏆

 13

.*பெண்ணியம் பேசுவோம்*


பெண்ணியம் பேசுவதற்கு இன்றைக்கு ஏதுமில்லை என்ற முரணே எனக்கு விருப்பம் என்பதானல்


என் கருத்து வேறுவகை. முச்சங்க காலங்களிலே பெண்ணியம் பெருமை பெற்று விளங்கியமைக்கு 


பெண்பாற் புலவர்கள் வரிசைகட்டி நிற்பதனை சொல்ல வேண்டுவதன்று பின் எக்காலமுமே இங்கு 


பெண்ணியம் பேசிய பெரியோர், பெரியார் உட்பட காலந்தோறும் வாழ்ந்து கழிந்த நாடிது


பெண்ணியம் பேசுவதை விட இங்கே பெண்ணியம் காக்கும் கடமை ஆணாக பிறந்த அனைவருக்கும் 


உண்டு என்பதானால் பெண்ணியத்தை காக்க, வளர்க்க வகையறிந்து 

பொது  செயலமைத்து  


பெண்ணியம் தன்னை போற்றுவதே யாவர்க்கும் உயிரனைய கடமையென உற்றறியுங்கள் உத்தமரே


*மா  கோமகன்*


🏆🏆🏆

 14.

*பெண்ணியம் பேசுவோம்*


பெண்ணென்று பூமியிலே பிறந்துவிட்டாலே

நல்லதை நினைக்கவியலாத சூழலே

விளைந்திடவே


எண்ணற்ற இடர்வரினும்

ஏற்றங்கொண்ட

மகளிரென


மாற்றங்கண்ட காலம் வரினும்

மாறமுடியாத பெண்ணாய்


கணவனைக் கண்கண்ட தெய்வமாய்

கைதொழவே


செய்திட்ட காப்பிய பெண்ணாய் வாழ்ந்தாலும்

கண்ணீரென்ற


அருவி குறையாத

கானல்நீரென

மகிழ்ச்சி தெரிய


இன்றில்லை என்றுமே பெண்ணுக்கு

நித்ய கண்டம் பூரண ஆயிசோ



பெண்ணால் பெண்ணுக்கும் பெருமை

பெண்ணைச்

சார்ந்தோருக்கும் பெருமை

உணர்ந்தே 

உயர்த்தியே பேசிட்டால் போதுமா


வாய்வார்த்தை மணக்குமா இனிக்குமா

இல்லையே கசக்கவே செய்யுமே


பெண்ணைப்

போற்றிட

தரணியும் ஏங்குமே


தங்கமங்கை என்றே சொல்லித்தான்

தங்கம் போல உருக்கி

தட்டி மாற்றிக்குறைத்து

கூட்டிக் கழித்துப் பூட்டியே வைக்கின்றனரோ

பெண்ணை.


கவியநாயகி

*சு.நாகவள்ளி*

மதுரை.


🏆🏆🏆

 15.

*பெண்ணியம் பேசுவோம்*



அரிதினும் அரிது 

மானிடராய் பிறப்பதே அரிதென்ற 

நிலைகளிலே 

பிறந்திட்ட நமக்குள்ளே 

ஆணுக்கு அடிமை பெண்ணென 

காணும் கண்ணோட்டங்கள் 

மாறுவது 

காலத்தின் கட்டாயமென்பேன் 


பெண்ணியம் பேசி 

கலைந்திடும் கூட்டமில்லை 

நாங்களென 

நிகழ்கால நூற்றாண்டின் 

தொடக்கத்திலே 

பெண்ணுரிமையை 

முன்னிறுத்தியே 

சாதிக்கட்டுகளிலிருந்தும் 

சடங்குகளின் 

ஆதிக்கத்திலிருந்தும் 

வெளியாக்கவும் 

குடும்ப சொத்துகளில் 

பங்காளியாக்கிடவும் திராவிடர் 

இயக்கம் தீர்மானமாக்கியதை 

செயல்படுத்த 

முன் வராத ஆட்சிகளை 

விரட்டி 

திராவிடர் ஆட்சி மலர்ந்திட 

உயிர் பெற்ற தீர்மானங்களின் விளைவே 

ஓரளவு பெண்ணுரிமை 

நிலவுவது என்பேன் 


காலங்கள் பல மாறி 

கடந்தாலுமே 

விஞ்ஞான வளர்ச்சியென 

நாம் பேசி 

கலைந்தாலுமே 

ஆண் வர்க்க மனதிலே 

தனக்கு அடிமை பெண்ணென 

அடக்கியாளும் உணர்வுகள் 

மாறிட 

வேண்டியது காலத்தின் 

கட்டாயமென 

உணர்ந்திடல் வேண்டுமென்பேன் 

நாமெல்லோரும் சமயுரிமையுடைவர்களென 

எண்ணங்கள் 

மலர்ந்திட வேண்டுமென்பேன் 



*சைல்ஸ் அகமது .* கத்தார்


🏆🏆🏆

16

*பெண்ணியம் பேசுவோம்*


அருங்காட்சிப் பொருளாக 

அழகாக்கி திரையிட்டு.. 

அடுமனை வாசத்தில் 

அம்புலிகள் அடைபட்டு.. 


குரல்இழந்த குயிலாக 

குடிலுக்குள் உடைந்தபடி.. சுரம்மிழந்த இசையாக 

சோகத்தில் மிதந்தபடி..


இருக்கின்ற பேதைஇங்கே 

இடிவிழுந்த வீடாக.. 

இறக்கைகள் இருந்துமே 

பறக்காத பேடாக..


தடாகத் தாமரையை 

தடாவால் தடுத்திடும் 

தடையிட்டு கடைவிரித்து போர்க்கணையாய் தொடுத்திடும்.


பதுங்கி ஒதுங்கியே 

ஒடுங்கியது போதும் 

செதுக்கிய சிற்பமவள்

புகழ்விண்ணை மோதும்..


அவளாக அவளைவிட 

குவளையமே கூத்தாடும்..

அறிவான அரிவைகண்டு 

அனல்தணிந்து பூத்தாடும்..


செறிவான நிறையவள் செம்மையான இறையவள் 

தறிபூட்டி நெய்திட 

தடைதாண்டும் திரையவள்..


ஐந்திணை யானவள் 

வையத்தின் வாழ்வவள்.

பைந்தமிழ் பாவையாய் 

பார்மைய மானவள்..


பொசுக்கென்று பொங்கிடும் எரிமலை தனலவள்..

விசும்பின் வெள்ளோட்ட 

வேகத்தின் நகலவள்..


வாக்கப்பட்டு வந்ததாலே வரட்டியாய் அவள்பொழுது.. ஊக்கமில்லா தேக்கத்தில் ஊர்கிறது உயிர்அழுது..


இமயத்தை தாண்டியும்

இருள்விலக்கி வெல்கிறாள்..

விமர்சனம் தாங்கியே

சமரசம் கொள்கிறாள்.. 


ஆணுக்கு இணையான

ஆகாயத் தாமரைகள்..

அறைதாண்டி வெளியேற

அக்னி  பூத்திரிகள்..


 *நிலா*

 

 🏆🏆🏆

 17.

*பெண்ணியம் பேசுவோம்.!*


கணவனை  இழந்து விட்டால்

காதலிக்க சுற்றிவந்து

கண்ணடிக்கும் காளையர்கள்..

அவளை மறுமணம் புரிய

முழுமனதோடு மறுப்பதேனோ ..!


வெண்ணிலவே ஒரு நாளில்

மஞ்சள் நிறம் மாறும் போது...

வெள்ளை சேலை அடையாளம்

தேவைதானா விதவைக்கு..!


விதி தந்த கோலம்

விதவை என்றாகி விட்டால்...

மதியுடனே

மனம் மாற்றிடுவோம்...

அவளை மறுமணம் செய்துப் 

போற்றிடுவோம்..!


உள்ளத்தின்

உணர்ச்சிகள் புரியாமல்...

உடல் தின்னும்

மிருகத்தை கட்டிக்கொண்டு

பெண்கள் படும் பாட்டை

சரி செய்யா சமுதாயமே..! 


திருமணம் தோற்பதால்

வாழ்க்கையொன்றும் இருளல்ல...

மறுமணம் தேடுவதால்

 பெண் ஒன்றும் இழிவல்ல..

 என்னைப் பொருத்தவரை

கற்பு என்றாள் 

மனசென்றுதான் சொல்லுவேன்..!


இளமைக்கு

துறவு வாழ்க்கைச் சூட்டியது

சமூகப் பார்வை..!

உணர்வுக்கு பூட்டு போட

அவள் உள்ளம் தான்

இடம் தருமா ?


பூவை என்ற பெயரே

பூக்களை சூடுவதற்கே..!

பாவை அவள் பொலிவிழக்க

பூக்களை மறுக்க

வைப்பது  ஏன்..?


சம்பிரதாய சடங்குகளுக்கு

இறுதி அஞ்சலி

செலுத்திவிட்டால்...

இனி வரும் காலங்களில் 

வருந்தி வாழ தேவையில்லை...!


பிறப்பது ஒரு முறை தான்

புரிந்துக்கொள்வோம்..!

இருக்கும் வரை

மகிழ்ச்சியில் திளைத்திடவே...

மூடப்  பழக்கங்களை

மூலையில் எறிய வேண்டும்..!


வருங்காலம்

இளைஞர்கள் கையிலே...!

மூழ்கவேண்டும் 

ஆழ்ந்த சிந்தனையில்...

பெண்ணியம் பேசுவோம்..

பெண்மைப் போற்றுவோம் 


மறுமணம் பாவமல்ல...

 குரல் கொடுப்போம்                             உரிமைக்கோறுவோம் 

மறுமணம் புரிவோம் ..!


*என். தமிழ்ஆதி*


🏆🏆🏆

 18.

*பெண்ணியம் பேசுவோம்*


ஆணும்பெண்ணும் சமம்..

ஏனோமறுக்கும் சிலமனம்..

எத்துறையும் அவள்கைகளுள்

அடக்கம்..

ஏனோமாய வேலிஉடைக்க

இன்னும் தயக்கம்..


புதுவசந்தம் வாசலில்..

பழைய பஞ்சாங்கம்

புரட்டும் விரல்கள்..?


கைம்பெண் விதவை

முண்டை  முதிர்கன்னி..

புனைந்த பெயர்களுக்கு

ஆண்பால் என்னவென்று

அறிந்ததுண்டா யாரேனும்..?


காற்றுக்குக் கடிவாளமிட

கணப்பொழுதும் முயற்சி..

முன்னாளில் செய்துவைத்த சூழ்ச்சி..


போதைப்பொருளில்

ஒன்றா பெண்..?

நுகர்வதும் எறிவதுமாக

நித்தம் வாழ்க்கைப் போராட்டம்..

இனியும் வேண்டாம்

களியாட்டம்..


இரவிலல்ல..

 பகலிலாவதுபெண்

தனித்துச் சுற்றிவர

தகுதியான நாள்வரும்..

அந்நாளில்..

 பெண்ணியம்பேசும்

அவசியம் அற்றுப்போகும்..


          *மஞ்சுளா பாரதிகணேசன்.*

          

🏆🏆🏆


 19.

*பெண்ணியம் பேசுவோம்...*


சகலமும் உணர்ந்தவரும்

சமத்துவம் உரைப்போரும்

ஆசையை அறுப்போமென

பெண்ணாசை துறக்காமல்


சொன்ன சொல்லெல்லாம்

உடலில் செல்களாய் ஓட

இந்த உடம்பெனும் ஓடத்தை

ஓட்டை அடைத்துத் தந்தவள்


பெண்ணென எண்ணும்போதே

ஆணாதிக்கம் அறுந்துவிடும்..


அவன் தேவைக்கு உதவும் ஆள்

அன்று அங்கு அவளிருந்தாள்

இன்று அவளுக்கும் சேர்த்து

இன்னொரு பணியாள் அவ்வளவே


அவள் கல்வி கற்றதாலே

பிள்ளைக் கல்வி பெருகியது

இருவரின் வரவினாலே

உயர்கல்வி பெருகியது


கணிணித் துறையிலும்

கார்ப்பரேட்டுகளிலும்

கால்வைத்துப் பாருங்கள்

கடமைக்கு பேதமில்லை


பெயர்சொல்லி அழைப்பதே

பெயருக்குரிய மதிப்பென்பதும்

ஆணும் பெண்ணுமாய்

உண்ணுவதும் பரிமாறுவதும்


கடமையும் பொறுப்பும் இரு

கண்ணாயின் அவளதில் ஒன்று

கற்பெனும் களங்கமிலா அன்பு

இருவருக்குமாய் உணர்தல் நன்று


பெண்ணியம் பேசுவதால்

பெருமை வந்து சேருமே

அவளது வெற்றிக்கு

உரியவ ரெவராயினுமே


பெண்ணியம் பேசுவோம்

மண்ணுலகம் பயனுற.. 


 *சங்கர் ஹாசன்*


🏆🏆🏆

  20.

*பெண்ணியம் பேசுவோம்.*


நான் வாசலில் குனிந்து

கோலம்போடுகையில்

எப்போதும் எட்டிப்பார்க்கும்

எதிர் வீட்டு ஜன்னல்கள்.


அவசர நடையாய்

அலுவலகம் போகையில்

என் முதுகில் நடக்கும்

ரகசிய கால்கள்.


பேருந்து நெரிசலில்

பிதுங்கி நெளிகையில்

என் சதையில்மொய்க்கும்

சபல    ஈக்கள்.


தடுக்கி விழுந்து

முந்தி சரிகையில்

என் மார்பைத் துளைக்கும்

மன்மத அம்புகள்.


தம்பி வயதென

நம்பிப் பழகினால்

கைகளைத் தடவும்

பழுத்த   பிஞ்சுகள்.


ஐயோ பாவமென

அன்பாய் நெருங்கினால்

தப்பாய் அழைக்கும்

அப்பா வயசுகள்.


உறவுகள் என்றே

உரிமையில்  பழகி

வழிந்தே வழுக்கும்

வழுக்கைத் தலைகள்.


உதவியைக் கேட்டு

பணிந்தே நின்றால்

படுக்கையைக் காட்டும்

பதவித் திமிர்கள்.


வாய்ப்புக்காக

பதுங்கும் புலிகள்.

பார்வையால்  உடலை

மேயும் கண்கள்.


விலகிப்போகத் தெரியவில்லை.

உலகின் உள்மனம்

புரியவில்லை.


கண்ணியமாக

நடத்தும் ஆண்களின்

காலடி தொழுது கேட்கிறோம்.


பெண்ணியம் போற்றும்

மனிதரையெல்லாம்

தெய்வமாகப் பார்க்கிறோம்.


*நறுமுகை.*


🏆🏆🏆

  21.

*பெண்ணியம் பேசுவோம்*


பெண்ணியம் பேசுவோம் பேச்சு அளவில்//

குடும்பத்தில் கணவர் எடுக்கும் முடிவு//

மாமனார் செய்யும் அதிகாரம் வேதனை//

கல்வி என்பது தன்னம்பிக்கை மட்டுமே//

இன்று பெண்ணியம் எங்கே எது?

தாத்தா என்றேன் தங்க இதழ்//

எனத் தொட்டு மகிழ்கிறான் இதுவே//


மாமா என்றேன் மார்பகத்தை தொடுகிறான்//

சித்தப்பா என்றேன்

சிந்தனை தவறாய்



எண்ணித் தொடுகிறான் மனதில் வேதனை//

அலுவலகத்தில் அதிகார நிலையில் தலைமை ஆண்//



மருமகன் என்ற நிலையில் கர்வம்//

பெண்ணியம் என்பது

பேச்சளவில்//

செயல் அளவில் என்பதே உண்மை.


*பொ.சுப்புலட்சுமி*

தேவகோட்டை.


🏆🏆🏆 

*நிறைவு*



பரிசு அறிவிப்பு

கவிதை வனம் நடத்துகிற கவிதை போட்டி ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருக்கிறது அந்தச் சிறப்பு மிக இந்த நிகழ்வை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிற இந்த அமைப்புக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் 376 வது நாள் பெண்ணியம் காப்போம் என்கிற தலைப்பிலே நடந்த கவிதை போட்டிக்கு


தமிழமுதன் ஆகிய நான் நடுவராக இருந்து, வந்திருந்த 21 கவிதைகளில் சிறந்த மூன்று கவிதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அன்புக் கட்டளைக்கு இணங்க 21 கவிதைகளையும் படித்து முடித்தேன். 21 பேரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல ,ஒருவருக்கும் ஒருவர் அந்த கவிதையில் இளைத்தவர்களும் அல்ல ,எல்லோரும் சிறப்பாக எழுதியிருந்தார்கள் அதே வேளையில் இந்தப் பெண்ணியம் காப்போம் என்கிற தலைப்பில் எதார்த்தமாக ஒரு பெண்ணுக்கு நடக்கிற சம்பவங்களை தொகுத்து சிறப்பான முறையில் எழுதி இருக்கிறார் தன் கவிதையிலே நறுமுகை வீசும் கவிஞர் நறுமுகை அவர்கள் 


'தம்பி வயதென

நம்பி பழகினால்

கைகளைத் தடவும்

பழுத்த பிஞ்சுகள் தம்பி என்று நெருங்கினால் அவன் தடவி பார்க்கிறான் என்றும் ஐயோ பாவமென அன்பாய் நெருங்கினால்

தப்பாய் அழைக்கும்

அப்பா வயசுகள்'


  அப்பா எனும் வார்த்தைக்கு அவன் தகுதி இல்லாதவன் அப்பால் தள்ளி வைக்க கூடியவன் என்ற கருத்திலே அருமையாக தன் கவிதையை ப்பதிவு செய்த


நறுமுகை அவர்களுக்கு முதல் பரிசும் 


அற்புதமான வரிகளோடும் சுகமான சந்தங்களோடும்

கவிதைத் தொடங்கி '


'ஆணுக்கு இணையான

ஆகாய தாமரைகள்

அறை தாண்டி வெளியேற 

 அக்னி பூத்திரிகள்'


 என்று அருமையாக அந்த கவிதையை முடித்திருக்கிறார் 

 ஆரம்பத்தில் இருந்து முடிகிற வரை ஒரே சந்தத்தில் அற்புதமான வரிகளில் எழுதி இருக்கிற


நிலாவிற்கு இரண்டாவது பரிசையும்


 செங்கதிர்வாணன் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் ஒரு நான்காயிரம் பாடல்களுக்கு மேல் பக்தி பாடல்கள் எழுதி இருக்கிற மிகச் சிறந்த கவிஞர் அவருடைய கவிதை எந்த நேரத்திலும் ஆண்களை பெண்கள் விட்டுத் தர மாட்டோம் எனவும் பெண்களும் ஆண்களை விட்டுத் தரமாட்டோம் என்கிற முறையில் 


'பெண்களின் ஒற்றுமை பேரெழுச்சி கண்டது 

ஒவ்வொரு துறையும் ஓங்கி வளருது

ஆணவன் வலிமையோ உடலில் மட்டுமே பெண்ணவள் வலிமையோ உலகையே ஆளுது' 


எனக்
கவிதை வடித்த


செங்கதிர்வாணன் அவர்களுக்கு மூன்றாம் பரிசையும் இந்த நேரத்திலே அறிவிக்கிறேன் இப்படி ஒரு வாய்ப்பை தந்த கவிதை வனம் அமைப்புக்கு என்னுடைய நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்

துக் கொண்டு விடைபெறுகிறேன்



Comments