விக்டரி மோகன் பிறந்த நாள்

75 வயது
எழுச்சி இளைஞர்
நீலகண்டன் அவர்களுக்கு 
வணக்கம்

எழுத்தாளர்களை
இனம் கண்டு பாராட்டும்
பேராசிரியர்

ஊக்கப்படுத்தி
கூர் தீட்டும் 
கூராசிரியர் ஜெயபாலன்
அவர்களுக்கு வணக்கம்




திருமுல்லை வாயில் 
உதிர்க்கிற 
ஒரு வார்த்தை
திரு வார்த்தை 
விக்டரி மோகன்

இவர்
மாரி
பெற்றெடுத்த பாரி

வெற்றியின்
மறுவுருவம்

விவேகத்தின்
திருவுருவம்


வெற்றி எனும்
வார்த்தையின்
ஆங்கில வடிவம் விக்டரி

தொண்டை 
மணடலத்தின்
தொண்டு செய்யும் factory

காலம் 
கண்டெடுத்த ஞாலப் பூ

கோவில்கள்
விரும்புகிற கோலப்பூ

ஏழை
எளியவர்களுக்கு வாழைப் பூ 

நாங்கள்
விரும்புகிற நீலப்பூ

வைணவம் தான்
இவரது வீடு

பிற மதங்கள் 
இவர்
சிறகு உலர்த்தும் கூடு

உதவும்
மனிதர்களில் இவர் மோனை

அம்பேத்கரை
கொள்கையைச் சுமக்கிற யானை

இவர் மெழுகுவர்த்தி
ஒடுக்கப்பட்ட சூரியன்களுக்கு
ஒளியேற்றுபவர் 


ஏழையர்க்கு
எழுத்தறிவித்து
சேர்த்தார் புண்ணியம் கோடி

இல்லாமல்லியின்
பிள்ளையப் பார்க்க
இறைவனும் வருவான் நாடி

தேசிய நீரோடையில்
கலந்த பேராறு

தொட்டதெல்லாம் துலங்குவது
இவரது வரலாறு

காந்தியும் நேருவும் 
இவருக்கு இரு கண்கள்

அம்பேத்கர் தான்
இவருக்கு மூளை

யாருக்காகவும்
வேடம் போடாத பாடம்

வெள்ளத்தால் 
மூழ்கி விடாத ஞானம்

தரித்திரம் என 
ஒதுக்கியவனை
சரித்திரம் படைக்க வைத்தவர்

மூளையின் 
மூலை முடுக்கெல்லாம் 
பிறர் நலன் பேணுவதே 
இவர் கடமை

இவருடைய
நாடி நரம்பெல்லாம்
பிறர் வளர்ச்சி காணுவதே 
இவரது உடைமை

அண்ணனுக்குப்
பிறந்தநாள் சொல்லி
விடைபெறுகிறேன்

நன்றி
வணக்கம் 











முப்பெரும் விழா

நாள்:14.05.2083 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிமுதல் 1.00 மணி வரை மங்கள வித்வானாம். CBSE பள்ளி, திருமுல்லைவாயில் (மங்களம் திருமண மஹால்)

வரவேற்புரை

வழக்கறிஞர் A.C.சத்தியமூர்த்தி M.A,BL,
துணை தலைவர் CCc

தலைமை தாங்கினார் 

முனைவர் மு.நீலகண்டன்
செயலாளர் CCC

விக்டரி மோகன் பிறந்த நாள் வாழ்த்துரை வழங்கினார் 

திரு Agi Dr.S.கருப்பையா B.Sc., (Agri).,M.B.A., M.Phil., MSW (MBL}

State President & PR Media Co-Ordinator TN General Secretary-MFLSCSTEWA

நூல்களை வெளியிடுபவர்

: திருமிகு. விக்டரி மோகன்

தலைவர் CCC

இந்தியப் பொருளாதாரம்ஒரு பார்வை வெளியிட்டுச் சிறப்புரை:
திரு. இரா.விஜயகுமார்
MA.,B.L,
அரசு கூடுதல் செயலாளர்.தலைமை செயலகம், சென்னை. பணி நிறைவு


அம்பேத்கரின் சிந்தனைகள் நூலின் முதல் பிரதியை பெற்று சிறப்புரை : 

முனைவர். க.ஜெயபாலன் M.A., Ph.D
இணை பேராசிரியர், தமிழ்துறை
 அரசினர் கல்லூரி. நந்தனம்

Dr.அம்பேத்கர்
பாமாலை வழங்குபவர்
திரு. கா.அர்சுணன் M.A. (T) M.A. (Pol.Sc.) B.E4|

விக்டர் மோகன் பிறந்தநாள் கவிதை வழங்குபவர்கள்

கவிஞர். தமிழமுதன்
கவிஞர். கு.தென்னவன்

மாணவ, மாணவியர்க்கும்.
அப்பேத்கரிய சிந்தனையாளர்க்ளுக்கும்
நூல்களை வழங்குதல்



விக்டரி கல்வி அறக்கட்டளை

ஏற்புரை வழங்குவர்.
விக்டர் மோகன்

நன்றியுரை

முனைவர். கோ.சக்கரபாணி

M.Com., MCA., DSADP M.Phil., Ph.D. நிதி செயலாளர் Ccc


















 

Comments