வள்ளலார் பிறந்த தினப் போட்டிகள்

வள்ளலார் பிறந்த தினத்தை யொட்டி பள்ளி மாணவ- மாணவியருக்கு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் என்று பாடிய வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் பிறந்த தினம் அக். 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அருட்பிரகாச வள்ளலார் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில், பள்ளி மாணவ- மாணவியருக்கு பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.கோசுமணி, தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்க நிறுவனர்/தலைவர் கவிஞர் தமிழ் அமுதன், பாடலாசிரியர்கள் அ.இசை, பழமொழிபாலன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.



 

Comments