மகாகவி ஈரோடு தமிழன்பன் 89 வது பிறந்த நாள்
தொண்ணூறே வாழ்க
.....
சிதறாமல்
சொற்கள் பாயும்
பதறாமல் பெரு
நெருப்பாய் சீறும்
எதிரிகள்
யாரும் இல்லை
முளைத்தாலும்
உதிரிகளாய் கீழே வீழும்
பகுத்தறிவுக் கிழவன்
பட்டறையில் நெய்த
ஈட்டியெனக்
கவிதைப் பாயும் -திராவிட
கருத்தியல் நாவில்
நாட்டியம் ஆடும் -சனாதன
வேட்டிகள் அவிழ்ந்து
ரோட்டினில் ஓடும்
அண்ணாவின்
தமிழின் நெடி
கலைஞரின்
கவியரங்க மடி
அன்னியன் மொழிக்கு
கன்னி வெடி
முப்பொழுதும் கரங்களில்
தமிழன் கொடி
தொண்ணூறு
அகவை காணும்
அய்யா தமிழன்பன்
வாழ்க...வாழ்க.....வாழ்க....
கவிஞர் கு.தென்னவன்
28. 09. 2022
இன்று பிறந்தநாள் காணும்
"ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு"
பிறந்தநாள் வாழ்த்து கவிதை
*ஈரோட்டில்!*
*இன்னொரு* *பெரியார்!*
தமிழை!
அமுதே!
தமிழ் அமுதே!
தமிழே!
உயிரே!
தமிழர்களின் உயிரே!
நாங்கள்
தொல்காப்பியத்திற்காக
இளம்பூரணாரையும்;
திருக்குறளுக்காக
பரிமேலழகரையும்;
தேடி அலைந்த போது...
எங்களுக்காக
புதுக்கவிதையெனும் பூங்காவனம்
அமைத்த
நந்தவனமே!
நாங்கள்
சொல்லுக்கும்;
பொருளுக்கும்;
மரபில் சிக்கித்தவித்த போது...
ஒரு வண்டி சென்றியூக்களைத்தந்து
எங்களுக்காக
புதிய வானம் அமைத்துக் கொடுத்த
ஈரோட்டுப் பறவையே!
கவிதை வயலில்
எங்களுக்காக
புது ரகத்தை விதைத்த
விவசாய தோழரே!
நீங்கள்
தமிழ் கற்றுக்கொடுத்த பின்புதான்
தேமதுரத் தமிழோசை
உலகெலாம் பரவியது!
நீங்கள் கூறிய
ஹைக்கூவையும்;
லிமரைக்கூவையும்;
கேட்ட பின்புதான்
நம் தேசத்து பறவைகள் எல்லாம்
தமிழ் கூவத் தொடங்கியது!
புத்தம்புதுப் பூக்களில்
நீங்கள் சேகரித்த
தேன் துளிகள்தான்
தமிழண்ணையின் ரத்த நாளங்களை
புலகாகிதம் அடையச் செய்தது!
வானம்பாடியோடு
நீங்கள் கைகோர்த்த காலங்கள்தான்
செம்மண் புழுதியோடும்;
கப்பிச்சாலையோடும்;
கரடு முரடாக கிடந்த
தமிழெனும் ஒற்றையடிப் பாதை
தார்ச்சாலை ஆக்கப்பட்டு
அதில் தமிழன்னை
பாமரன் இருக்கும் பக்கமெல்லாம் சென்று
ஒய்யாரமாய் நர்த்தனம் புரிந்தாள்!
பெரியாரின் பகுத்தறிவே!
மார்க்சிசியத்தின் புகுத்தறிவே!
பாரதியின் தேசியமே!
பாரதிதாசனின் தமிழ் தேசமே!
தாகூரின் இயற்கை வனப்பே!
நெருடாவில் சர்வதேச பினைப்பே!
வால்ட் விட்மனின் யாப்பே!
பாஷோவின் சொற்கோப்பே!
சித்தர்களின் தீர்ப்பே!
தமிழ் மரபின் மூப்பே!
சென்னி மலையின் தறியோசையே!
எங்களின் உயிரில் ஓடும் தமிழோசையே!
90 ஐ தொடும் நீங்கள்
வாழிய பல்லாண்டு!
எங்களை வாழ்த்தும்
உம் கரம் கொண்டு!
பேரன்புடன்
டாக்டர். அ.பழமொழி பாலன்
மயிலாப்பூர்
கவிதைக்குப் பிறந்த நாள்
----------------------------------------------
உலக புத்தகநாள்
அன்று
உங்களை சந்தித்தேன்
கடற்கரையில்!
இன்றும் உங்களை
படித்துக் கொண்டிருக்கிறேன்!
நீங்கள்
காற்று பிரசவித்த
இசை!
நீங்கள்
எங்களின் தமிழுக்காய்
வெள்ளை காகிதமாய்
தன்னை தியாகம்
செய்த மரம்!
நாங்கள்
தாயின் கருப்பையில்
உருவானோம்!
நீங்கள்
தமிழின் நெருப்பு பையில்
கருவானீர்!
நீங்கள்
தமிழின்
அட்சயப்பாத்திரம்
அதனால்
எங்களுக்கு
இல்லாமல் போனது
பிச்சைப்பாத்திரம்!
நீங்கள்
நிலவிற்கு
சுயமரியாதை
கோபத்தையும்
சூரியனுக்கு
அன்பின் பாதையையும்
கற்று கொடுப்பவர்!
ஈரோட்டு கிழவனின்
தடி
இப்போது மாறிப்போனது
ஈரோடு தமிழன்பனின்
கவிதையாய்!
கீழடியில் கேட்ட
தாலாட்டுகள் எல்லாம்
முதன் முதலில்
நீங்கள் பாடியது!
சென்ரியு லிமரிகூ
கஜல்
இவையெல்லாம்
யாருக்கு புரியப்போகிறது!
ஆயிறம் வருடம் கழித்து
நீங்களே ஒரு
கீழடியாய்
தமிழ் அறிமுப்படுத்தும்!
உங்களின் எதிரே அமர்ந்து
தங்களின் நேர்மறை
எண்ணங்களை எல்லாம்
திருடிச்சென்றவன் நான்!
"கனல்"
என்று என்னை
அழைக்கும்
உங்கள் வார்த்தையில்
நான்
0 (ஜீரோ) டிகிரி
உருகிப்போகிறேன்!
உங்கள்
உதடுகளில் எல்லாம்
ஒட்டிக்கிடக்கிறது
தமிழ்!
உங்கள் வீட்டினில்
எல்லாம்
கொட்டிக்கிடக்கிறது
தமிழ்!
இனி
வீதி எங்கும்
ஊரெங்கும்
நாடெங்கும்
மணக்கப்போகிறது
உங்கள் தமிழ்!
-புரட்சிக்கனல்
எத்தனையோ வார்த்தைகளும் வரிகளும் வாழ்த்துரைக்க அணிவகுத்தாலும் அத்தனையும் என்றோ நீங்கள் வார்தெடுத்த சித்திரமே ஆகும் !! ஆகவே எழுத்து எனும் தூரிகையால் கவிஓவியம் படைத்த பைந்தமிழ் வேந்தே !!
இருகரம் கூப்பி
சிரம் தாழ்த்தி உம்மை வாழ்த்தி வணங்குகிறேன்
அரும்பெரும் கவியே !!
வாழ்க பல்லாண்டு !!
தங்களை சந்தித்தே மகிழ்ச்சி !!
எனும் போது தமிழலோடு பயணிக்கும் நம் தலைவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி !!
பழமொழியும் தமிழின் ஒரு அங்கம் தானே !!
அனைவருக்கும் வாழ்த்துகள் !!
🙏🙏🙏🙏🙏
தமிழ் போலும் அய்யா *ஈரோடு தமிழன்பன்* அவர்கள்
நீடூழி வாழ்க வாழ்க!
*ஈரோடு*
*தமிழ்*
*அன்பு*
இவை மூன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து நம் தமிழினத்து வரலாற்றில், நறுந்தமிழர் இலக்கியத்தில் நிலைத்து நின்றிருக்கும்!
YozenBalki
🌸☘️🙏🙏☘️🌸
சென்னிமலை சிறப்பே
செகம் வணங்கும் சூரிய பிறையே
புதுமைகள் படைத்த பொதுவுடைமை பூபாளமே மின்மினி காடுகள் வரைந்த தமிழோவியமே !
உன் வார்த்தைகள் கேட்டவரம் உலகிலேயே உயர் தரம் !
மின்னல் உறங்கும்போது கதவை தட்டிய பழையகாதலிகள் கனாகாணும் வினாக்களாகின்றன உந்தன் புதினமும் நாடகமும் படித்து
கவின்குறு நூறே
நெருப்பின் மிச்சதின்
அந்த நந்தனை எரித்த உச்ச கவிதைகேட்டு எங்களுக்குள் வந்தது தமிழ் சிலிர்ப்புகள் !
மதிப்பீடுகளின் திறனாய்வே சாகித்ய விருதுபெற்ற எங்கள் வள்ளுவ வணக்கம் நீ
சாமான்யர்களின்
நெஞ்சின் நிழல் நீர்
விடியல் விழுதே !
ஊமைவெய்யிலிலும் தோனி வருகிறது
தீவுகள் கரையேறுகின்றன
உன் ஒருவண்டி சென்ரியு கவிதைகேட்க
எங்கள் விடிவெள்ளியே |
உன் நடைமறந்த நதியும் திசைமாறிய ஓடமும் எங்களுக்கு கிடைத்த கொடைகள்
எம்.சக்த்திவேல்
திருவேற்காடு-சென்னை-7
தந்தைபெரியார் பிறந்த ஊரில் பிறந்தவர்
தமிழின் அன்பர்
நல்ல பண்பர்
சிறந்த நண்ப
பகுத்தறிவாளர்களின் தோழர்
நம் தலைவரின் ஆசிரியர்
வாழ்க பல்லாண்டு
வாழ்த்துகள்
நன்றி
ஜெய்பீம்அறிவுமானன்...ர்ர்
பேரோடு சீரோடு ஈரோடு பேர்தாங்கி
பாபாடும் பூங்கவி வாழி!
தொலைக்காட்சி சேதிகளை வாசித்து நாளும்
சுவைமாட்சி தந்தாய் தமிழே!
குரலுனது தேனாய் குறளெனது தானாய்
தரமுனதை தீட்டுது போற்றி!
வற்றாத மாத்தமிழ் அன்பனான நாயகரே
பொற்கோலம் போடு தொடர்ந்து!
பல்லாண்டு சொல்லாண்டு பாரிதிலே நீவீர்தான்
எல்லா நலமுடன் வாழி!
நட்பன்புடன்
கவிக்குமரன்.
Comments
Post a Comment