உலக சாதனை ஒரே மேடையில் 225 நூல்கள் வெளியீடு

கவிமலர்கள் பைந்தமிச்சங்கம் .. 05-06-2022. அந்த நாள் சென்னை வடபழனியில் உள்ள #பீமாஸ்_டெம்பிள்_ட்ரீ என்ற நட்சத்திர ஹோட்டலில் எங்களின் கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம் நடத்திய #உலக_சாதனை_விழா விழாவில் தமிழ் சார்ந்த விருந்தினர்களே கலந்து கொண்டனர். ஒரு நிகழ்வில் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறேன் இங்கு வித்தியாசமாக 225 நூல்களை ஒரே மேடையில் தொகுப்பாக வெளியிடுகிற வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி.225 நூல்களின் 225 படைப்பாளர்களுக்கு என்னுடைய 225 வணக்கங்கள்.ஒரே மேடையில் பறை இசையும் பரதமும் இணைந்து நடத்திய நிகழ்வை பார்க்கும்போது உண்மையிலேயே இதான் உலக சாதனை எனப் பேசினார்.தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் நிறுவநர் தலைவர் கவிஞர் தமிழமுதன், திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.கே.ராஜராஜா திரைப்பட இயக்குநர் பிருந்தாசாரதி, எழுத்தாளர் டாக்டர் கே.ஜி.ஜவஹர், மில்டன் அகாடமி நிறுவனர் வை.பாஸ்கர், டாக்டர் அரிமா சிந்தைவாசன் போன்ற விழா ஜாம்பவான்கள் வீற்றிருக்க,இவர்கள் முன்னிலையில் Inkzoid book of records& raaba media book of records இனிதே நடைபெற்றது. இந்த சிறப்பான விழாவை ஏற்பாடு செய்ய உதவிய அத்தனை பேருக்கும் பங்கெடுத்த படைப்பாளிகள் அவர்தம் குடும்பத்தினற்கும்,பறையும் பரதமும் வேறுஅல்ல என்று மேடையை தன் வசப்படுத்திய அத்தனை கலைஞருக்கும், கவிப்பூந்தளிர், இராஜா DME, R.பாஸ்கர், பரமகுரு கந்தசாமி, பூஜா ராஜ்குமார், பூனா ராஜ்குமார், தயாநிதி, என்மகன் ஆதி, முஸ்தபா குர்லி, தேவி, பி.கண்ணன், மற்றும் விழாவை தூக்கி நிறுத்திய தொகுப்பாளர் திரு. முத்துவிஜயன் அவர்கள் மற்றும் தன்வலியை பொருட்படுத்தாது ஓடி ஓடி உழைத்த வைரவரி வானரசன் .. மனம் நிறைந்த நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தன் குடும்ப விழாவாக நினைத்து ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். ரித்து சூரியா .. அனைவருக்கும் நன்றியும், பாராட்டுகளும்,வாழ்த்துகளும்.!

Comments