இன்று நான் சந்தித்தேன் சென்னை மேயர் திருமதி பிரியா ராஜன்

நானும் கவிஞர் கு.தென்னவன் அவர்களும்,கு.தென்னவன் எழுதிய இரவுக் கிண்ணத்தில் பகல் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் ஒளிக்கதிர் தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை புதுக்கவிதையில் எழுதிய நூல்.இந்த இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியை மேற்கொண்டு வரும் வேளையில், எங்களின் உடன் பிறவாத அண்ணன் திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் சென்னையின் வணக்கத்திற்குரிய மேயர் திருமதி பிரியா ராஜன் அவர்களைச் சந்தித்து அழைப்புக் கொடுத்தோம். பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர்,28 வயதான திருமதி பிரியா ராஜன் அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் பட்டம் பெற்றவர். நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ,சென்னை மாநகராட்சியின் 74-வது வட்டத்தில் மாமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு, தன்னை எதிர்த்தவர்களை விட 6,299‬ வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அமைச்சர் சேகர் பாபு அவர்கள் முன்னிலைப்படுத்தியதாலும் அவரது குடும்பம் திராவிடப் பாரம்பரியம் என்பதாலும் பிரியா ராஜன் மேயர் ஆனார். இந்த முறை சென்னை மேயர் பதவி,ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பிரியா ராஜன் சென்னையில் மூன்றாவது பெண் மேயராகப் பதவியேற்றார். அதோடு, வடசென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர் என்ற பெருமையும் பிரியா ராஜனைச் சாரும். இதற்கு முன்பு தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான் மேயராகத் தேர்வாகினர். இவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இதற்கு முன் சென்னை மாநகராட்சி, 1957 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் முறையே தாரா செரியன் மற்றும் காமாட்சி ஜெயராமன் ஆகிய இரு பெண்கள் இந்த மேயர் பதவியை அலங்கரித்தன ர் தற்போது, பிரியா ராஜன் மூன்றாவது பெண் மேயர் என்பதும், முதல் தலித் மேயர்.அதாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து உயரத்திற்கு வந்த பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது பிரியா, 1989, 1996 ஆம் ஆண்டுகளில் பெரம்பூர் தொகுதியில் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த செங்கை சிவம் அவர்களின் பேத்தி என்பதும் கூடுதல் சிறப்பு. இவரின் கணவர் கே. ராஜா பொறியியல் பட்டதாரி மற்றும் தகவல் தொழில்நுட்பம் அறிந்தவர்.திரு. வி. க. நகரின் திமுக பகுதிச் செயலாளர் . இவ்விணையருக்கு ஒரு மகள் உள்ளார்.

Comments