கனவு நாயகன் நூல் வெளியீட்டு விழா

கனவு நாயகன் நூல் வெளியீட்டு விழா மற்றும் கவிஞர் அக்கினி பாரதி அவர்கள் பிறந்த நாள் விழா
224/07/2022 காலை 10.30 மணி அளவில் சென்னை என்றாலே உடனே நினைவுக்கு வரும் மெரினா கடற்கரையில் நடைபெற்றது.

யானை, குதிரை,வானம்,மலை இவை எப்போது பார்த்தாலும் மனதுக்கு இதமாகவும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் .அதே போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடக்கும் கடலை எப்போது பார்த்தாலும் சலிப்புத்தட்டாது.அப்படிப்படட கடற்கரையில் நெய்தல் நிலத்தின் போராளி நெய்தல் நில மக்களுக்காய் இடைவிடாமல் போராடும் தமிழ்நாடு மீனவ மக்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.கோசுமணி அவர்கள் கவிஞர் அக்கினி பாரதி எழுதிய கனவு நாயகன் எனும் நூலை வெளியிட , ஒடுக்கப்பட்ட மக்களுக்காய் இடைவிடாமல் எழுதிக்கொண்டிருக்கும் இலக்கியப் போராளி கு.தென்னவன் பெற்றுக் கொண்டார்.நிகழ்வு ஒருங்கிணைப்பு தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் கவிஞர் தமிழ் அமுதன்.நன்றியுரை‌ திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர்,முனைவர் பழமொழிபாலன்

24 -7 -2022 இன்று காலை
சென்னை கலங்கரை விளக்கு
கடற்கரை மணற் பரப்பில்
நண்பர் கவிஞர்
அக்கினி பாரதி அவர்களுக்கு பிறந்த நாள்
வாழ்த்துக்கள் வழங்கினோம்

மூவகை
பழத்தின் சுவை
மூலிகைச்
செடியின் சுகம்
தூறலாய்
முப்பொழுதும்
சாரலாய்
விழுகின்ற மழை
தூய்மையின்
நட்பின் விழுது
கவிஞர்
அக்கினி பாரதி வாழ்க...

கவிஞர்
கு.தென்னவன்

என்னுடன்
நண்பர் ஜெ.கோசுமணி
கவிஞர் தமிழ் அமுதன்
முனைவர் பழமொழி பாலன்












































































 

Comments

  1. Duraisamy Kavi Covai: அமுதன் அவர்களுக்கு அன்பு வணக்கம் கோவையிலிருந்து துரைசாமி. மெரினா கடற்கரையில் நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பு. கனவு நாயகன் அரங்கேற்ற விழா கடற்கரையில் நடந்தது வித்தியாசமான ஒன்று. வங்கக்கடல் அன்னை வாழ்த்தட்டும், அலைகள் வாழ்த்தட்டும்,மெரினா தென்றல் இந்த நூலை திக்கெட்டும் பறவை செய்யட்டும் .என்னோட வாழ்த்துக்களும் கூட. Duraisamy Kavi Covai: அக்னி பாரதிக்கு எங்கள் மனம் குளிர்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

    ReplyDelete

Post a Comment