பண்பில் சிறந்த மாண்பாளர் அம்மா க.விமலா

கலைப் பண்பாட்டுத் துறையின் இணை‌இயக்குநர் திருமதி க.விமலா அவர்களைச் சந்தித்தேன். இணை இயக்குநர் அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்.அவரது தந்தை நல்ல எழுத்தாளர் .சமூகப் பற்று உடையவர்.அவரைப் போலவே திருமதி.க.விமலா அவர்களும் நல்ல படிப்பாளி.சமூகப் பற்று உள்ளவர்.ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும் என்று ஓயாமல் எண்ணி அதற்காக செயல்படுபவர்.அன்பின் வடிவமாக அன்னையைப் போல அரவணைப்பவர்.பண்பில் சிறந்த மாண்பாளர்.இளகிய இதயம் கொண்டவர்.யார்‌ உதவி கேட்டாலும் தன்னால் இயன்ற உதவியைச் செய்பவர்.அம்மா அவர்கள் நெற்றியில் விபூதி பூசி சின்னதாகக் குங்குமப் பொட்டு வைத்து வரும்போது தெய்வாம்சம் பொருந்தியவராக திகழ்வார்.அவர் அரசுப் பணிகளில் பல்வேறு உயர் பதவிகளைப் பெற்றிருந்தாலும் எந்தப் படாடோபம் இல்லாமல் எளிமையாகப் பழகக் கூடியவர்.எல்லாத் துறையில் இருந்தாலும் கடைசியாக கலைப் பண்பாட்டுத் துறையின் இணை‌இயக்குநர் பதவி வகித்த பிறகு எத்தனையோ கலைப் பிரிவில் துன்பப்படும் கலைஞர்களுக்குப் பல்வேறு உதவிகளைப் ‌பெற்றுத் தந்திருக்கிறார்.அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அன்று எத்தனை பேர் அம்மாவைப் பற்றி நெக்குருகிப் பேசியதைப் ‌பார்த்தேன்.தங்களுக்குக் கிடைத்த விடிவெள்ளி என்றே குறிப்பிட்டனர்.இனி ஏதாவது உதவி என்றால் யாரிடம் செல்வோம் என்று வருத்தப்பட்டு பேசியதைப் பார்த்தேன்.நான் 6 மாதத்திற்கு முன்னால் ஒரு நிகழ்வில் பங்கேற்றேன், அந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.அந்த விழாவில் என்னோடு முன்னமே பழகியவரைப் போல் எளிமையாகப் பேசினார்.அந்நிகழ்வை என் பக்கத்தில் பதிவிட்டதைப் படித்துவிட்டு கவிஞர் கு‌தென்னவன் அவர்கள் அம்மா எனக்கு நன்கு பழக்கமானவர் எனச் சொல்லி என்னை அழைத்துப் போய் அம்மாவிடம் அறிமுகப்படுத்தினார்.அன்றிலிருந்து என்னிடம் நன்றாகப் பழகக் கூடியவர்.அவர்களது நட்பு கிடைத்ததைப் பெரிதாக நினைக்கிறேன். நான்,உரிமைப் போராளி மதிப்பிற்குரிய அண்ணன் நங்கை மூர்த்தி,இலக்கியப் போராளி கவிஞர் கு.தென்னவன் ,பொறியாளர் ரஞ்சனி ஆகியோர் அம்மா அவர்கள் பணி ஓய்வு பெற்றமைக்கு வாழ்த்துத் தொரிவித்தோம்.












 

Comments

Post a Comment