தமிழ் முற்றம் நடத்திய விருது வழங்கும் விழா



 12/43.இராமானுஜம் தெரு, தி.நகர், 02.09.2023 சனிக்கிழமை, பிற்பகல்: 2.00 மணிக்கு தமிழ் முற்றம் நடத்திய

ஆசிரியர் தின விழாவினை முன்னிட்டு நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவிற்கு 
தமிழ் முற்றம் நிறுவனர் 
 எஸ். வேதாந்தம்ஜி அவர்கள் தலைமை தாங்கினார்.

கலைமகள் ஆசிரியர் கலைமாமணி கீழாம்பூர் எஸ்.சங்கர சுப்பிரமணியன்  சிறப்புரையாற்றினார்.

ஜெம் டிவியின் நிர்வாக இயக்குநர், திரு என்.சீதாபதி வாழ்த்துரை வழங்கினார் .

உலக சாதனையாளர், எழுத்தாளர், தூதுவர், இந்திய சாலை பாதுகாப்பு கூட்டமைப்பு
முனைவர் மா.ரா. சௌந்தரராஜன் அவர்களும் 

பொதுச் செயலாளர், விசுவ ஹிந்து வித்யா கேந்திரா       திருமதி டாக்டர் கிரிஜா சேஷாத்ரி  அவர்களும்
பாராட்டுரை வழங்கினார்கள்

ஓராசிரியர் பள்ளிகளின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் திரு.ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி
மகிழ்வுரை வழங்கினார்.


நிகழ்வின் தொடக்கத்தில் பேராசிரியர் முனைவர் பாகை இரா.கண்ணதாசன் குழுவினரின் பட்டிமன்றம் 
மாணாக்கரின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது ஆசிரியர்களா? பெற்றோர்களா?  எனும் தலைப்பிலே
நடைபெற்றது.
விழாவினை தமிழ் முற்றம் இலக்கிய அமைப்பின் தலைவர் பேராசிரியர் பொன்.கி.பெருமாள் அனைவரும் பாராட்டும்படி சிறப்பான முறையிலே ஒருங்கிணைத்தார்.
 
















































































































 

Comments