கவிஞர் கு.தென்னவன் நூல் வெளியீட்டு விழா

கவிஞர் கு.தென்னவன் அவர்கள் எழுதிய இரவுக்கிண்ணத்தில் பகல் ,தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் எழுதிய ஒடுக்கப்பட்டோரின் ஒளிக்கதிர் எனும் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. பெரியார் திடலில் உள்ள மணியம்மை அரங்கில் சனிக்கிழமை 11/06/2022 காலை 10 மணிக்கு நடைபெற்ற விழாவிற்குத் தலைமேயேற்று ஒடுக்கப்பட்டோர் ஒளிக்கதிர் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பாராளுமன்ற உறுப்பினர்.முதல் நூலை பி.என்.பெருமாள் பெற்றுக்கொண்டார்.விழாவிற்கு இரா.செல்வம் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் விசிக,செ.பொன்னிவளவன் மாவட்ட பொருளாளர்,இராவணன் சங்கு மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் விசிக,எஸ்.வெங்கடேசன் 74 வது வட்டச் செயலாளர் திமுக,ஆ.இருதயராஜ் திமுக,செ.நிலவன் வடசென்னை மாவட்டத் துணைத் தலைவர் காங்கிரஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . பி.இ.புத்தநேசன் மத்திய சென்னை மாவட்ட sc/st பிரிவு தலைவர் காங்கிரஸ்.அ.சீ.திருமாறன்,ச.திலீபன் விசிக,கோ.இளங்கோ விசிக, ஆகியோர் வரவேற்புரை நல்கினர். இரவுக் கிண்ணத்தில் பகல் எனும் நூலை சட்ட மன்ற உறுப்பினர்,சட்ட மன்ற காங்கிரஸ் தலைவர்,திரு.செல்வப்பெருந்தகை வெளியிட கலை பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் விமலா அவர்கள் பெற்றுக்கொண்டார்.திரு.ஆதிநந்த லெமூரியன் நிறுவநத் தலைவர் அபயம்,திரு.பா.மணிமாறன் பொதுச்செயலாளர் மின்கழகம் தொ.மு.ச, பி.என்.பெருமாள் அகில இந்திய bsnl சங்கம்,திரு.எம்.பி.இரஞ்சன் குமார் மத்திய சென்னை மாவட்ட தலைவர் காங்கிரஸ்,திரு.ஜெ.கோசுமணி தலைவர் தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம், கவிஞர் தமிழ்அமுதன் நிறுவநர்/தலைவர் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்,பெ.தமிழினியன் மாநில அமைப்புச் செயலாளர் விசிக,கீ.சு.குமார் மாநில செயலாளர் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.எம்.நித்தியானந்தம்,வேலூர் ஜெ.பி,நங்கை மூர்த்தி,ஆவடி.எஸ்.நாகராஜ்,சி.தூயவன்,எம்.கருணாகரன்.ந.சுரேஷ்,க.கரிகாலன்,சீ.மதியழகன்,பொன்.மணிமாறன்,வி.மோகனகிருஷ்ணன்,எம்.பச்சையப்பன்,பி.இராமமூர்த்தி,அ.அசோக்குமார் ஆகியோர் சிறப்பு நூல் பெற்றுக் கொண்டனர்.கா.மனோஜ்,பா.வினோத் நன்றியுரை வழங்கினர்.நிகழ்ச்சி நெறியாள்கை செய்தார் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அ.இசை. விழாவில் 'நீதியின் தீர்ப்பு' ஆசிரியர் கிருஷ்ணவேணி, கனவுத் தமிழ் இதழின் சிறப்பாசிரியர் கவிஞர் அக்கினி பாரதி,வடசென்னை தமிழ் சங்கத் தலைவர் எ.தா.இளங்கோ, திரைப்படப் பாடலாசிரியர்கள் கவிஞர் சுதந்திரதாஸ், கவிஞர் கற்பகம், கவிஞர் ஜெய்பீம் அறிவுமானன்,கவிஞர் புரட்சிக் கனல், கவிஞர் சக்திவேல், கவிஞர் பழமொழிபாலன், கவிஞர் வசீகரசுப்பு, கவிஞர் தன.தமிழரசு, கவிஞர் வைரவரி வானரசன்,பெப்சி தாஸ்,மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் செயலாளர் திரு.தமிழ்ப்ரியன்,உலகப் புகழ் மனவியல் நிபுணர் yozen பால்கி,திரு.ரஜினிகாந்த் மாநிலப் பொதுச்செயலாளர் விசிக, தென்னிந்திய கானா கலைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் கானா பெப்சி தாஸ்,மற்றும் பலர் பங்கேற்றனர்.விழாத் தொடக்கத்தில் மண்ணிசை வேந்தர்கள் கவிஞர் ஜெய்பீம் அறிவுமானன் மற்றும் கானா பெப்சி தாஸ் தமிழிசைப் பாடல்களைப் பாடினர்.விழாவின் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசாக YOZEN பாலகிருஷ்ணா எழுதிய மிகச் சிறந்த நூலான மனம் மனமறிய ஆவல் நூலை வழங்கினர்










Comments