கவிஞர் லலிதானந் அவர்கள் மரணம்











திருச்சி நாகலாபுரத்தைச் சேர்ந்த லலிதானந்த் அவர்கள் திரைப்படத்துறையில் பாடல் எழுத வேண்டும் என்ற முயற்சியோடு சென்னைக்கு வந்து கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேலாக பாடல்கள் எழுதி இருக்கிறார் .அதே நேரம் அதே இடம்,திரு திரு துறு துறு,ரௌத்ரம்,மாநகரம்,திருமணம்,ஜூங்கா,மழையில் நனைகிறேன்,அஞ்சலை,போன்ற படங்களுக்கு ,200 பாடல்கள் கடந்து எழுதி இருக்கிறார் அதிலே ஒரு வெற்றிப் பாடல் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இந்த படத்தில் என் வீட்டுல நான் இருந்தேனே அதைத்தொடர்ந்து அஞ்சலை படத்திலே தேவா அவர்கள் பாடிய டீ போடு என்ற வெற்றி பாடலும் நிறைய எழுதி இருக்கிறார். தன்னுடைய மனைவி பெயரையே தன் புனை பெயராக மாற்றிக் கொண்டு தன்னுடைய பெயரையும் சேர்த்து லலிதானந்த் என்ற பெயரில் எழுதி வந்தவர் லலிதானந்த். ஒரு எலுமிச்சம் பழத்தின் வரலாறு  லெமூரியாவில் இருந்த காதலியின் வீடு இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.அவருக்கு இரு பிள்ளைகள்  மகன் பெயர் அஸ்வத் மகள் பெயர் அம்சினி .தற்போது இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களின் படத்தில் அனைத்து பாடல்களும் எழுதி இருக்கிறார் அதற்குப் பிறகு இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள்  இயக்கும் ஒரு படத்திலே பாடலை எழுதி இருக்கிறார்.  இரண்டு ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு காரணமாக  சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்திருந்த நிலையில்  மாரடைப்பால் காலமானார்.  அவருடைய  பிறந்த ஊரான நாகலாபுரத்தில் நல்லடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டார். அவருடைய இறுதி மரியாதை செலுத்துவதற்காக தரமணியில் இருக்கிற வி .எச் .எஸ் மருத்துவமனைக்கு இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல்,பிரபு,கோகுல் இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் பாடலாசிரியர்கள்  குகை மா. புகழேந்தி,எம் ஜி கன்னியப்பன்,கு.தென்னவன்  தமிழ் பிரியன் தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கத் தலைவர் கோசு மணி, தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர்/தலைவர் கவிஞர் தமிழமுதன், கலந்து கொண்டனர் .

Comments