பக்தித் தரும் பரவசம் பாடல்கள் வெளியீடு

'பக்தித் தரும் பரவசம்' பாடல்கள் வெளியீடு. கவிஞர் பழமொழி பாலன், கவிஞர் கூடல் அழகர், கவிஞர் கதிர்பாரதி இயற்றிய பாடல்களுக்கு இஸ்தியாக் இசையமைத்து கவிஞர் பழமொழி பாலன், ப. சுப்ரஜா, பொம்மை பாலாஜி ஆகியோர் பாடிய இசைத் தொகுப்பு, தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர்/தலைவர் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் தமிழ்அமுதன் தலைமையில், உலகப் புகழ் உளவியல் நிபுணர் யோஜன் பால்கி வெளியிட, 'மேதை' திரைப்படத்தின் இயக்குனர், பாடலாசிரியர்,என். டி. ஜி.சரவணன் பெற்றுக்கொள்ள, இலக்கியப் போராளி கவிஞர் கு. தென்னவன் சிறப்புரை வழங்க, கவிஞர் சுபாஷ், பாடகர் பொம்மை பாலாஜி, தொழிற்சங்கப் போராளி ஜெய்சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்க பாடல் எழுதிய பாடலாசிரியர்கள் சார்பில் கவிஞர் பழமொழி பாலன் ஏற்புரை வழங்க, பாடகி ப. சுப்ரஜா அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்வு சிறப்பாக தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் வளாகத்தில் நடைபெற்றது. 

Comments