கவிஞர் தமிழ்அமுதன் கலைஞர் 90 வைரமுத்து
கலைஞரின் 90 –வது பிறந்த நாளையொட்டி
சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் 90
கவிஞர்களின் சந்திப்புக்கும் விருந்துக்கும்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
திருவாளர்கள்….வாலி,அப்துல்ரகுமான்.கலாப்ரியா,கல்யாண்ஜி,மனுஷ்யபுத்ரன்,,அய்யப்பமாதவன்,தமிழ்மணவாளன்,இளம்பிறை,கதிர்பாரதி,ஆரூர்.தமிழ்நாடன்,பா.விஜய்,விவேகா, இளையகம்பன்…என பல ஆளுமைகள் கலந்துக்கொண்ட இந்நிகழ்ச்சியில் நானும் கலந்துக்கொண்டேன்
..நான் "அறிவுச் சூரியன் அண்ணல் அம்பேத்கர் ” எனும் வாழ்க்கை வரலாற்றை புதுக்கவிதையில் எழுதிய நூலை கலைஞரிடம் கொடுத்தப்போது.புதுக்கவிதையில் எழுதி இருக்கிறாயா என்றார் ஆம் என்றேன்.கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இவர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் மாணவர் என்றார்.ஓ..அப்படியா என்று என்னைப் பார்த்து புன்னகைத்தார்.பூங்கொத்தையும் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து சொல்லி படமும் எடுத்துக்கொண்டேன். .
நிகழ்வுக்கு என்னை தொலைபேசியில் அழைத்த கவிஞரும் எனது தம்பியுமான கவிஞர் சொற்கோ கருணாநிதி ,மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் உதவியாளர் திரு. பாஸ்கர் ஆகியோர்க்கு என் நன்றி..வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்வை ஒருங்கிணைத்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
Comments
Post a Comment