கவிஞர் கலைமாமணி பால.இரமணி நினைவேந்தல் நிகழ்வு
25/11/2021 மாலை 6 மணியளவில் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,கவிஞர் கலைமாமணி பால.இரமணி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் படத்திறப்பு விழாவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.
கவிஞர் பால.இரமணி எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு நூலையும் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி தொகுத்த என்இனிய பாலா எனும் நூலும் வெளிப்பட்டது.
தொழிலதிபர்கள் வி.கே.டி.பாலன்,வி.ஜி.பி.சந்தோஷம், அகரமுதலி திட்ட இயக்குநர் பேரா.விசயராகவன்,கலை பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் இரா.குணசேகரன், நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத், கவிஞர் இளம்பிறை ஆகியோர்
நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.
கவிஞர் கலைமாமணி பால.இரமணி திருவுருவ திரைப்படத்தைத் திறந்து வைத்தும் நூல்களை வெளியிட்டும் தொல்.திருமாவளவன் தலைமையுரையாற்றினார்..கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி நன்றியுரையாற்றினார்.
Comments
Post a Comment