நாட்குறிப்பு

நாட்குறிப்பு

என்னை பாட்டு எழுதுவதற்கு யுனிவெர்சிட்டி படத்தின் இயக்குனர் பிரகதீஸ்வரன் அழைத்திருந்தார்.என் நண்பர்" வினை "என்கிற ஒரு படம் இயக்குகிறார்,என் நண்பர் கண்ணன் மேற்பார்வை இடுகிறார் நீங்கள் ஒரு பாடல் எழுதி தர வேண்டும் என்றார், நானும் ஒத்துக்கொண்டேன்.பிறகு கண்ணன் அவர்களை சந்தித்தேன். நாளை சைந்தவி பாடுவதற்கு தேதி கொடுத்துவிட்டார்,இன்றே எழுதினால் தான் முடியும் என்றார்.இந்தப்படத்திற்கு  இருவர் யுவராஜ்  மற்றும் சிதார்த் இசை அமைக்கிறார்கள் என்றார்.விசுவநாதன் ராமமூர்த்தி,சங்கர் கணேஷ் போலவா என்று கேட்டு விட்டு இருவரையும் சந்தித்தேன் ,நாளை எழுதி வருகிறேன் என்றேன் இன்னைக்கே முடிச்சா நல்லாருக்கும் என்றார்கள்.அங்கிருந்து புறப்பட்டு அவர்களுடைய சிறிய  ஒளிப்பதிவு கூடத்திற்கு சென்றோம்.இரவு உட்கார்ந்து எழுதினேன் ,அவர்களிடம் பாடலை கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.அடுத்தநாள் மாலை எம்.ஜி .யார் ஒளிப்பதிவு கூடத்திற்கு சென்றேன்.சைந்தவி வந்தார்கள்.என் பாடலை
           ' வானம் வானம் அருகிலே மேகம் என்னை உரசுதே'Vinai
 என்ற பல்லவி பாடும் போது வானம் அருகிலேயே  வந்து விட்டது.அப்படி ஒரு குரல் பாடி முடித்ததும் சைந்தவி சொன்னார்கள் இந்த பாடல் பாடுவதற்கு எந்த சிரமமும் இல்லை. வார்த்தைகள் இசையோடு இணைந்து இருந்தன என்றார்.இதற்குமுன் "கரிசல் பட்டியும் காந்தி நகரும்"படத்திற்கு என் பாடலை பாடவந்த கார்த்திக் இதே வார்த்தை சொன்னார்கள்.இவர்களும் அதே வார்த்தை சொன்ன போது உள்ளம் மகிழ்ந்தேன்.பிறகு சொன்னார் இந்த பாடலை கொடுத்த இசை அமைப்பாளர்கள் இருவருக்கும்  மிக்க நன்றி ஏனென்றால் தனிப்பாடல் (சோலோ சாங் )இப்போதல்லாம் கிடைப்பதில்லை என்றார்.உடனே இசை அமைப்பாளர்கள் இருவரும் இந்த படத்திலே எல்லா பாடலும் தனிப்பாடல்(சோலோ சாங் ) தான் என்றார்கள் நான் சொன்னேன் இந்தப்படத்திலே எல்லா பாடலும் சோலோ தான் இசை அமைப்பார்கள் மட்டும் டூயட் என்றேன் அந்த ஒளிப்பதிவு கூடமே சிரித்து குலுங்கியது    
          

Comments

  1. சிறப்பு.தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகள்..

    ReplyDelete

Post a Comment