கடற்கரை கதைகள்

கடற்கரைக்கு நேற்று குடும்பத்தோடு  சென்றிருந்தோம்.என் குழந்தைகளுக்கு
துப்பாக்கி சுடுவதிலே ஆர்வம் எனவே நேராக துப்பாக்கி சுடும்  இடத்திற்கு சென்றோம்.  சுடுவதற்கு எவ்வளவு என்று கேட்டோம்,அவர் சொன்னார் 8 குண்டு 10 ரூபாய் என்றார். சரி ஆளுக்கு 4 நாலு குண்டு வீதம் சுடுவோம் என்று முடிவு செய்து சுட ஆரம்பித்தோம்.நான் 4 நான்கையும் சுட்டேன்.என் மனைவி 3 குண்டுகளை சுட்டார் ஒன்று குறி தவறியது.அவரை போலவே என் இரண்டு குழந்தைகளும் மூன்று தான் சுட்டார்கள்.
                             பிறகு ஓரிடம் தேடி அமர்தோம்.இருவரும் விளையாடிக்கொண்டிருந்தார்கள்
. நாங்கள் பேசி கொண்டிருந்தோம். பெரிய மகன் ஓடி ஆடி களைத்துவிட்டு அந்த மண்ணிலே படம் வரைய ஆரம்பித்துவிட்டான்.என் இரு பிள்ளைகளும் நன்றாகவே ஓவியம் வரைவார்கள்.ஒவ்வொரு
படம் வரைந்த  பிறகும் எங்களிபாம் காண்பித்தான் நன்றாக இருக்கிறது என்று பாராட்டிவிட்டு நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம் .
                இடையிலே சுண்டல் விற்பவரை கூப்பிட்டு சுண்டல் சாப்பிடலாமா என்று கேட்டால் பிள்ளைகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் .சரி என்று விட்டுவிட்டோம்.மறுபடியும் பெரியவன் சிறியவனுக்கு ஒரு ஓவியம் வரைகிறேன் என்று சொல்லி அழகான டெடிபீர் படம் வரைந்து அதை மேலும் அழகுப்படுத்தி அதற்கு ஒரு சட்டம் வரைந்தான்.
               .சிறியவன் பார்த்துவிட்டு எங்களை பார்க்கசொல்லி அந்த ஓவியத்தை   பாரட்டிக்கொன்டிருந்தான்.அதெல்லாம் முடித்து விட்டு விளையாட துவங்கி  விட்டார்கள்.நானும் என் மனைவியும் பேசத்துவன்கிவிட்டோம்.திடீரென்று வேர்கடலை விற்பவர் குரல் கேட்டுநிமிர்ந்தேன்.கடலை விற்று கொண்டு இருந்தவர் கவனமில்லாமல் என் மகன் வரைந்த ஓவியத்தின் மேல் கால் வைக்கப்போனவர் சட்டென்று காலை தூக்கி பினனால் சென்று அந்த ஓவியத்தில் கால் படாமல் சுற்றிக்கொண்டு வந்து எங்களிடம் கடலை வேண்டுமா என்றார் வேண்டாம் என்றோம்.
                ஆனாலும் அவர் அந்த ஓவியத்தை மதித்த மாண்பை என்னால் மறக்க முடியவில்லை அவர் போகும் வரை அவரையே கண்வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.என் மனைவி ஏன் இப்படி கண் வாங்காமல் பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.
               நான் நடந்த தகவலை சொன்னேன், உடனே மனைவி சென்னையில் படித்தவர்கள் வாழும் இந்த நகரத்தில்,பணத்துக்காகவே அலைந்து  மொழி,கலை எல்லாம் மறந்து திரியும் இந்த மனிதர்கள்   நடுவில் இப்படி ஒரு மனிதர் என்று கேட்டு வியந்து,அதற்காகவே அவர் தொழிலை அவர் கலையுணர்வை மதித்து ஓவியம்  வரைந்த என் பெரிய மகனை அதற்குள் தொலைவில் சென்று விட்ட அவரை அழைத்து வர சொல்லி அவரிடம் கடலை வாங்கிவிட்டு அவரின் உணர்வை பாராட்டிவிட்டு என் மகன்களிடமும் அவர் அந்த ஓவியத்துக்கு தந்த மரியாதையை  சொல்லி அவரை வழி அனுப்பி  வைத்தோம்.
              பிறகு அவர்கள் விளையாட நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.சிறிது நேரத்தில் காற்று வந்து அந்த ஓவியத்திற்கு மணல் பூக்களை தெளித்து விட்டு போனது.    

Comments

  1. அடடே..அனுபவத்தை அழகாக பகிர்ந்து விட்டீர்களே..வாசிக்க சுவையாக இருந்தது..தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. அருமையான கதை..:)

    ReplyDelete

Post a Comment