கவிதைகளுக்கான கவிதை

கவிதைகளுக்கான கவிதை


கவிதைகளுக்கு தெரிந்துவிடுகின்றன 
தாம் கவிதைகள் இல்லையென்று ;
படித்தவர்கள்  தான் சும்மாவே 
பாராட்டுகிறார்கள்.


எழுத்துக்களிலிருந்து மெல்ல விலகி ஒதுங்கி நிற்கிறது 
எழுதநினைத்த கவிதை. 


கவிதை 
அழகாய் இருக்கும்போது  
இசையாகிவிடுகிறது;
முதிர்வு பெறும்போது 
மொழியாகிவிடுகிறது.


இசை கருவிகளில்  
மௌனித்துகொண்டிருக்கும்
இசையை 
கவிதைதான் பேச வைக்கிறது'
ஆனால் நானில்லை என்றால்
நீயில்லை என்று 
ஒருபோதும் சண்டையிட்டுக்கொல்வதில்லை.


வானத்திலிருந்து 
தவறிவிழுந்த கவிதைகளை 
தாங்கி நிற்க 
புல்லின் நுனிகளே போதுமானது. 







கவிதை கவிதையாய்
இருக்கும்போது 
கவிதையாகிறது.


எப்போது முடியும்  என்று 
நினைக்க வைப்பதல்ல 
கவிதை;
அதற்குள் முடிந்துவிட்டதா என்று
நினைக்கவைப்பதே
கவிதை. 

Comments

Post a Comment