உன்னை மறந்திடவே மறந்துவிட்டேனா நூல் வெளியீட்டு விழா

கவிஞர் ஜெய மணியன் எழுதிய உன்னை மறந்திடவே மறந்துவிட்டேனா நூல் வெளியீட்டு விழா

தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில்
கவிஞர் ஜெய மணியன் எழுதிய உன்னை மறந்திடவே மறந்துவிட்டேனா நூல் வெளியீட்டு விழா
16/11/2024 சனி மாலை 5 மணியளவில் பாட்டுக்கோட்டை அரங்கில் நடந்தது.விழாவிற்கு சங்கத்தின் நிறுவுர் தலைவர் தமிழமுதன் தலைமை ஏற்றார்.
      முதல் நூலை ஹைக்கூ கவிதையாளர்கள் 
சங்கத்தின் தலைவரும் குழந்தைப் பாடல்களுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷ் வெளியிட
நான் FM இயக்குனர் ஆர்ஜெ நாகா பெற்றுக்கொண்டார்.விழாவில் கலைஞரின் பெண் சிங்கம் திரைப்படத்தின் இயக்குனர் பாலு ஸ்ரீரங்கம், மேதை திரைப்படத்தின் இயக்குனர் சரவணன், இசையமைப்பாளர் சுரேந்தர், பத்திரிகையாளர் மணவை பொன் மாணிக்கம், பாடலாசிரியர்கள் அன்பழகன், வேல்ராஜன், சூளைமேடு அன்பரசு,விஸ்வாமித்திரன் நட்சத்திரன், ஆர்கே பிரான்சிஸ், பேராசிரியர் இரவி, சிவபெருமான்,எடிட்டர் சரவணன், நாடகக் கலைஞர் கோமதி, கவிஞர் பானுரேகா,
பங்கேற்றனர். ஏற்புறையை கவிஞர் ஜெயமணி வழங்கினார்.

















































 

Comments