நற்றமிழ் நாவலர் ஔவை நடராசன் அவர்களின் படத்திறப்பு விழா

தமிழா! விழி! தமிழால் விழி! 

தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய 
12 ஆம் ஆண்டு தொடக்கவிழா
 மற்றும் 
தாமோதரம் திட்ட அறிமுக விழா

 நற்றமிழ் நாவலர் ஔவை நடராசன் அவர்களின் படத்திறப்பு விழா 
உலகத் தாய்மொழி நாள் விழா

 சென்னை கோட்டூர்புரம் தமிழ் இணையக் கல்விக்கழகம் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஔவை ந.அருள் தலையேற்று படத்திறப்பு செய்துவைத்து உரையாற்றினார்.  சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறைப் பேராசிரியர் முனைவர் வாணி அறிவாளன் ஔவை நடராசன் குறித்துச் சிறப்புரை ஆற்றினார்.


அடுத்தபடியாக தமிழா! விழி! தமிழால் விழி! தமிழ் இலக்கியக் கழகம் தமிழ்ப் பதிப்புலக முன்னோடி சி.வை.தா.அவர்களின் 190 நிறைவை ஒட்டி உருவாக்கியுள்ள தாமோதரம் திட்டத்தை பதிப்பாசிரியர் ப.சரவணன் அவர்கள் தொடங்கிவைத்துச் சிறப்புரை ஆற்றினார்.

தாமோதரம் திட்டத்தின்கீழ் கண்டி அரசுப்பள்ளி ஆசிரியர் வா‌ அகல்யா  அவர்களின் 
"என் இனிய வளரிளம் பருவமே'! என்ற நூல், பாடநூல் கழக உதவி இயக்குநர் ப.சரவணன் அவர்களாலும் வே.செவ்வந்தி மற்றும் க. கருப்பசாமி ஆகியோர் தொகுத்த ஆளுக்கொரு நியதி எனும் சிறுகதை நூல் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராலும் வெளியிடப்பட்டது. 

பிற்பகலில் நூற்றாண்டு உரையரங்கு நடைபெற்றது. இவ்வுரை அரங்கில் காருக்குறிச்சி அருணாச்சலம் பற்றி நூல் வெளியிட்ட சிவக்குமார், சென்னை மாநிலக்கல்லூரி பேராசிரியர் சீ.ரகு  ஆகியோர் உரையாற்றினர்.

பின்னர் என் இனிய வளரிளம் பருவமே நூலின் அறிமுக விழா நடைபெற்றது இதில் வா.அகல்யா ஏற்புரை வழங்கினார்.

மாலை அமர்வில் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் தமிழ்அமுதன் மற்றும் எழுத்தாளர் அக்னி பாரதி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

உலகத் தாய்மொழிநாள் அமர்வில் புழல் சிறை ஆசிரியர் கருஞ்சட்டை இராசேந்திரன் சிறப்புரை ஆற்றினார்.

தாமோதரம் திட்டத்தின் தலைவர் வே. செவ்வந்தி, அமைப்பின் இயக்குநர் கரிசல் பாலா ஆகியோர் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர் நிகழ்ச்சியை பாலு ஆனந்த் தொகுத்து வழங்கினார்.

தாமோதரம் திட்டம் 
தமிழ்ப் பதிப்புலக முன்னோடி சி. வை. தாமோதரம் அவர்களின் 190 ஆவது பிறந்த நாள் நிறைவை ஒட்டி தொடங்கப்பட்ட புதிய திட்டம். 
இத்திட்டத்தின் மூலம் முதல் தலைமுறை எழுத்துகளை ஊக்கப்படுத்தவும் பதிப்புச் செலவினங்களைக் குறைப்பது மற்றும் பதிப்பாசிரியர்களை ஊக்கப் படுத்துவது அங்கீகரிப்பது, தமிழின் மிக முக்கிய வளங்களான நூல்களைப் பதிப்பிப்பது என நோக்கங்களை வகுத்துக் கொண்டு இத்திட்டம் செயல்பட முயற்சிக்கிறது. 

அவ்வகையில் பதிப்பாசிரியர் ப. சரவணன் அவர்களால் இத்திட்டம் 19.02.2023 அன்று சென்னை, கோட்டூர்புரம் தமிழ் இணைய கல்விக் கழகத்தில் தொடங்கிவைக்கப்படுகிறது. 

இடப்பக்கம்

பதிப்பாசிரியர் ப. சரவணன், 
உதவி இயக்குநர், 
தமிழ்நாடு பாடநூல் கழகம், தமிழ்நாடு அரசு. 

வலப் பக்கம்

தாமோதரம் திட்டத்தலைவர், 
வே. செவ்வந்தி

















 

Comments