சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சிந்தனைகள்

 எல்லாவித குற்றங்களும் , பொருளாதாரக்குறைவால், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யும் குற்றங்களாகும். வயிறு நிரம்ப உணவும் மனிதனுக்கு வேண்டிய மற்ற சௌகர்யங்களும், எல்லோருக்கும் வழங்கப்படுமேயாகில், அல்லது அது கிடைக்க சந்தர்ப்பங்கள் ஏற்படுமே யாகில் , குற்றமென்று வழங்கப்படும் நடத்தைகள் யாவும் , அதிகமாகக் குறைவுபடுமென்பதற்குத் தடை இல்லை. குற்றங்கள் யாவும் வாழ்க்கைக்கு வேண்டிய அவசியங்களின் குறைவால் செய்யப்படுகின்றன. மக்கள் யாவருக்கும் , சாதாரண வாழ்க்கைக்கு வேண்டிய சலுகைகள் வினியோகிக்கப்படும் பட்சத்தில் , எங்கும் திருப்தி உண்டாகி அமைதியும் சாந்தமும் உலகில் நிலவும். குற்றங்கள் உலகில் குறைவுபட இதுதான் மார்க்கம். வெறும் தண்டனையால் , அதிருப்தியால் உண்டாகும் குற்றங்கள் குறைவுபடா. 


சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம். பக்கம் 1628,1629. 


புதுவுலகம் / நவம்பர் 1935.

Comments