கவிஞர் கு.தென்னவன் பிறந்த நாள்
எழுச்சிக் கவிஞர், இலக்கிப்போராளி,சமூகநீதிக் கவிஞர் கு.தென்னவன் அவர்களின் பிறந்த நாள் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் 05/11/2022 மாலை 6 மணியளவில் தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.கோசுமணி தலைமையில் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கவிஞர் தமிழ் அமுதன் முன்னிலையில் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு கவிஞர் அக்கினி பாரதி,கவிஞரும்திரைப்படப்பாடலாசிரியருமான புரட்சிக்கனல்,கவிஞரும் உலகப்புகழ் உளவியல் நிபுணர் யோஜென்யுனிக் சென்டரின் தலைவருமான யோஜென் பால்கி அவர்களும் கவிஞரின் மகன் தென்.இலக்கியன் அவர்களும் வந்திருந்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.இந்தப் பிறந்த நாளிலே இதுவரை சமூகநீதிக்கவிஞர் கு.தென்னவன் எழுதிய 14 நூலினை கவிஞர் கு.தென்னவன் கவிதைகள் எனும் ஒரே தொகுப்பாக கொண்டுவர வேண்டும் என கவிஞர் தமிழ்அமுதன் அவர்கள் முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் அடுத்த பிறந்த நாளுக்குள் புத்தகத்தைக் கொண்டுவந்து மிகப் பெரிய நூல் வெளியீட்டு விழாவாக
நடத்தி தமிழகத்தின் ஆகச்சிறந்த ஆளுமைகளால் வெளியிடச் செய்ய வேண்டும் எனப் பேசினார்.விழாவுக்கு அக்கினி பாரதி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
Comments
Post a Comment