மக்கள் முதல்வருக்கு மனிதநேயத்திருவிழா



உழைப்பின்

புனை பெயர் மு.க.ஸ்டாலின்


ஸ்டாலின் என்பது
வெற்று வார்த்தையல்ல
வெற்றி வார்த்தை


உன்
தண்டுவடம்
தி.மு.க எனும் தேரை இழுக்கும்
தேர் வடம்


ஏழைகளின்
அழுகையைத் துடைக்க வந்த
தொழுகைக்கூடம்


நீ
நூலாம் படை
அறுக்கும்
கலைஞரின் காலாட்படை


முதன்முதலாய்
சென்னைக்கு
ஆதி குடிப் பெண்ணை
மேயராக்கிய
மீதி கலைஞர்


திராவிடம் கண்டெடுத்த
மானுடம்


தமிழினத்தைத் தலையில் தாங்கும்
சூரியச் சும்மாடு


நீ கலைஞர்
எழுதிய பாடல்
உன் ஆட்சி
திராவிட மாடல்


நாமங்களுக்கு
நாமம் போட வந்த
பெரியார் நாமம்


பட்டைத் தீட்டுவது
உன் கொள்கையல்ல
தமிழினத்தைப்
பட்டைத் தீட்டுவதே
உன் கொள்கை


கொட்டைக் கட்டிக் கொள்வது
உன் வேலையல்ல
தமிழர்க்குக் கல்வி கொடுத்து
கோட்டை ஏற்றுவதே உன் வேலை


சில பேர்
காலை நம்பி
முதல்வரானார்கள்

நீ
கலைஞரின் எழுது
கோலை நம்பி
முதல்வரானாய்


சிலர்
முட்டிப் போட்டு
முட்டிப் போட்டு
அடைந்தார்கள்
முதல்வர் பதவியை


உன்னைக் கேலி பேசிய
கால் நடைகளுக்குத்
தெரியாது
உன் கால் நடையின்
சூத்திரம்


நீ
நடக்க நடக்க
முதல்வர் பதவி -
உன்னை
நோக்கி நடந்து வந்தது


நீ
எப்போது உறங்குவாய்
உன்னை உன்னை‌
எதிர்பார்த்து எதிர்பார்த்து
உறக்கமே
உறங்கி விட்டது


தாய் மானம்
காத்தவன் நீ
தமிழ்த்தாய் மானம் காத்த
தாயுமானவன் நீ

வாழ்த்துப் பாடலுக்கு
வணங்காத தலைகளை
எழுந்து நிற்க வைத்த
எழுச்சி நாயகன் நீ


காலையில் திருச்சியில்
இருக்கிறாய்
மாலையில் மதுரையில் இருக்கிறாய்
இரவில் விழுப்புரத்தில்
இருக்கிறாய்
எப்போதுதான்
வீட்டில் இருப்பாய்


பெரியார் கைப்பிடித்து
நடந்தவன்
அண்ணாவின் பிள்ளையாய் வளர்ந்தவன்
மிசா சிறையில் ஆசிரியர் கி.வீரமணி மடியில்
விழுந்தவன்
மக்கள் முதல்வனாய் எழுந்தவன்


மிசா தான் உனக்கு
மீசை முளைக்க வைத்தது


உன் ஜாதகத்தில்
முதல்வராகும் கட்டம் இல்லை
என
நூல்கள் கூடி
பின்னிய வதந்தி வலையைத்
திமிங்கிலமாய் அறுத்தெரிந்து  முடி சூடினாய்


உன் எளிமைக்குப்
பிறந்த பிள்ளை
இன்னும் எளிமையானவன்

அவன் வித்தியாசமானவன்
ஒற்றைச் செங்கல் கொண்டே
உதயசூரியனுக்கு
ஒரு
கோட்டைக் கட்டித் கொடுத்தவன்


வயதான பிறகும்
கால்சட்டை போடுபவர்கள் பேசும் வார்த்தைகளைக்
கண்டு கொள்ளாமல் இருக்கிறாய்
ஏனென்றால்
கால் சட்டைப் போடும் வயதிலிருந்தே
கருப்பு சிவப்பு கொடியைத் தூக்கியவன்


ஒன்றிய அரசு
நீ வந்த பிறகுதான்
புகழ்க் குன்றிய அரசு ஆனது.


நீட்டை(neet)
வேட்டையாடும் கலைஞர்
கோட்டை நீ


சென்னைப் பேருந்துகளுக்குப்
பெண்கள் சூட்டிய பெயர்
ஸ்டாலின் பஸ்


முடிவெட்டும் கடையிலே
தொடங்கினாய் இளைஞரணி
மக்கள்
முடிவெடுத்து விட்டார்கள்
நிரந்தர முதல்வரும் நீ







































































ஒரு மாறுபட்ட கவியரங்கம்


கேள்வி:ஈரோடு தமிழன்பன் நீ பழவாணிகம் செய்பவனா 

நான்:ஆம் ஐயா

கேள்வி காயான எழுத்து எப்போது பழுக்கும்

நான்: ஐயாவைப் பார்க்கும் வரை காளான் எழுத்துபார்த்த பிறகு கனிந்த எழுத்து

கேள்வி :எத்தனை பாடல்கள் எழுதியிருக்கிறீர்

நான் 300 பாடல்கள்

கேள்வி; தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் நடத்துகிறீரா

நான் ஆம் ஐயா


கேள்வி :எத்தனை உறுப்பினர் இருக்கிறார்கள்

நான் : 400

கேள்வி :அக நானூறு  புற நானூறா

அவையில் சிரிப்பு

கேள்வி: கவிதைக் காய்கள் காய்க்கும்

நான் அதிகம் படிக்கும்போது


அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு
சுறுசுறுப்பில் தேனி
செயலில் ஞானி
இளைஞர்களுக்கு ஏணி

கவிஞர்களின் வேடந்தாங்கல்

சிலைகளை மீட்டெடுத்த
வடசென்னை கோயில்

கோவில் சொத்துகளை
மீட்டெடுத்த தளபதியின் சொத்து

தமிழ் வளர்க்கும்
தளபதி படைக்கு ஒரு‌கை
அவர்களை வணங்கும் என் கை


ஈரோடு தமிழன்பன்

தமிழ்நாட்டின் தாகூர்

எழுதி எழுதியே
எழுதுகோலாய்
இளைத்துப் போனவர்

என் மனம் கவர்ந்த
மானசீக ஆசிரியர்

என் அறிவு ஆசான்
என் மொழி காட்டி
என் வழிகாட்டி

இது
எழுச்சி நாயகனுக்கு
எழும்பூர் எடுக்கும் விழா

சூரியனுக்கு
கிழக்குதானே விழா எடுக்கும்

மக்கள் முதல்வருக்கு எடுக்கும்
மனிநேயத்திருவிழா



Comments

  1. சிறப்பு சிறப்பு நண்பா! ஒவ்வொரு வரியிலும் கந்தகப்பொடி கலந்து வைக்கும் வித்தகம் உனக்கு வாய்த்திருக்கிறது! அடர்ந்த பொருள் ஆயிரந்தன்னை மறைத்து வைத்திருக்கிறாய்! திராவிடக் கோட்டை அரண் மதில் மீது நிறுத்திய பீரங்கிகளில் ஓரங்கி நீ! இனமானம் காக்க எழுதுகோல் தூக்கி இன்னும் பற்பல காவியம் படைத்து வரலாற்றில் இடம்பெற பெரிதும் வாழ்த்துவேன்!

    YozenBalki
    Senior Psychologist
    www.yozenmind.com

    ReplyDelete

Post a Comment