அழகாய் பூக்குதே ......
அழகாய் பூக்குதே
நானும் இசையமைப்பாளர் இஷ்தியாஃ அவர்களும் போதை
அடிமைக்கு எதிராக ஒரு இசை தொகுப்பு உருவாக்கம் சம்மந்தமாக
பாடகர் பிரச்சன்னா அவர்களை சந்திக்க சென்றிருந்தோம் .
அவரை சந்தித்து அவருடன் இந்த இசை தொகுப்பு எதற்கு
என்றும் உங்களுடைய பங்களிப்பாக இரண்டு பாடல்கள் பாடித்தருமாறும்
நாங்கள் கேட்டுக்கொண்டோம்.அதே நேரத்தில் என் தேசம் என் கனவு
இசை தொகுப்பிலே அவர் எங்களுக்கு பாடி தந்ததற்கு அவருக்கு நன்றி
தெரிவித்து கொண்டோம்.
உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதாகவும் வேண்டிய
உதவிகள் செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார்.அவர் வாக்குறுதி
அவர் குரலை போலவே எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதை
நாங்கள் அறிவோம். பழகுவதற்கு எளிமையானவர் அதே நேரத்தில்
பாடுவதில் வலிமையானவர் .
அவரிடம் இந்த இசைதொகுப்புக்கு உங்கள் கருத்தை பதிவு
செய்யுங்கள் என்றோம் . அப்போது நாங்கள் வியக்கும் வண்ணம்
ஒரு கருத்தை கவிதையாக சொன்னார்.
"வாழ்வதற்காக சாவுங்கள்
சாவதற்காக வாழாதீர்கள்"
Comments
Post a Comment