Skip to main content

Posts

Featured

ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியீட்டு விழா

  ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியீட்டு விழா                  ஹைக்கூ கவிஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் சென்னை. நவம்.11. கடந்த சனிக்கிழமையன்று மாலை சென்னை கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன்ஸின் ஏழாவது தளத்தில் ‘ஹைக்கூ முற்றம்’ ஐந்தாவது நிகழ்வு இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு முனைவர் இரா.பாஸ்கரன் தலைமையேற்றார். அமைப்பாளர் கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் அனைவரையும் வரவேற்றார். இதுவரை நடைபெற்ற ‘ஹைக்கூ முற்றம்’ நான்கு நிகழ்வுகளின் தொகுப்பாக ‘ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியிடப்பட்டது. இதனைக் கவிஞர் மு.முருகேஷ் வெளியிட, தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் கவிஞர் தமிழமுதன் பெற்றுக்கொண்டு, வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் சா.கா.பாரதி ராஜா எழுதிய ‘பென்சில் பூக்கள்’ ஹைக்கூ நூலைத் திறனாய்வு செய்து கவிஞர் புதுகை ஆதீரா உரையாற்றினார். ‘ஹைக்கூவும் நானும்...’ எனும் தலைப்பில் கவிஞர் சா.கா.பாரதி ராஜா பேசுகையில், “சிறுவயது முதலே கவிதை நூல்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த நான், தொடக்கத்தில் சிறுசிறு புதுக்கவிதைகளை எழுதினேன். அப...

Latest posts